;
Athirady Tamil News

கொரோனாவுக்கு சிஆர்பிஎப் வீரர் உயிரிழப்பு – பலி எண்ணிக்கை 8 ஆக உயர்வு..!!

0

மத்திய ரிசர்வ் போலீஸ் படை (சி.ஆர்.பி.எப்.), எல்லை பாதுகாப்பு படை (பி.எஸ்.எப்.), மத்திய தொழில் பாதுகாப்பு படை (சி.ஐ.எஸ்.எப்.), உள்ளிட்ட மத்திய ஆயுதப்படைகள் மற்றும் தேசிய பாதுகாப்பு கமாண்டோ படை (என்.எஸ்.ஜி.) போன்ற மத்திய படைகளில் கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

இதில் தற்போது மேலும் 100 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதில் அதிகபட்சமாக சி.ஐ.எஸ்.எப்-ல் 32 பேர், சி.ஆர்.பி.எப்-ல் 31 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். இதன் மூலம் இந்த படைகளில் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 3,300-ஐ கடந்துள்ளது. இதில் சி.ஆர்.பி.எப்-ல் மட்டுமே 1046 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். நோய் தொற்றுக்கு ஆளானவர்களில் 1999 பேர் குணமடைந்துள்ள நிலையில், 1278 பேர் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்நிலையில், டெல்லியில் 44 வயதுடைய மத்திய ரிசர்வ் போலீஸ் படை (சி.ஆர்.பி.எப்.) வீரர் ஒருவர் கொரோனா பாதிப்புக்கு பலியாகி உள்ளார். அவருக்கு சிறுநீரக தொற்று வியாதி இருந்துள்ளது. இதுவரை சி.ஆர்.பி.எப். வீரர்களில் 1,046 பேருக்கு பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டு உள்ளது. 8 பேர் பலியாகி உள்ளனர் என சி.ஆர்.பி.எப். தரப்பு தகவல் தெரிவிக்கின்றது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

eighteen + 2 =

*