;
Athirady Tamil News

யாழ். மல்லாகம் புனித சதா சகாய மாதா வளாகத்தில் இரத்ததான முகாம்!! (வீடியோ, படங்கள்)

0

மல்லாகம் புனித சதா சகாய மாதா இளையோர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் யாழ். மல்லாகம் புனித சதா சகாய மாதா வளாகத்தில் இன்று ஞாயிற்றுக்கிழமை(28) காலை-09 மணி முதல் பிற்பகல்-01.30 மணி வரை மாபெரும் இரத்ததான முகாம் இடம்பெற்றது.

இந்த இரத்ததான முகாம் நிகழ்வில் 51 வரையான மல்லாகம் மற்றும் அயற்பகுதிகளைச் சேர்ந்த இளைஞர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டு குருதி தானம் வழங்கியதாக ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.

மேற்படி இரத்ததான முகாம் நிகழ்வில் தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையின் நடமாடும் இரத்த வங்கிப் பிரிவினர் நேரடியாகக் கலந்து கொண்டு இரத்தம் பெற்றுக் கொண்டனர்.

இதேவேளை, கொரோனா இடரால் பாதிக்கப்பட்ட மல்லாகம் பகுதி மக்களுக்கு நிவாரணப் பொதிகளை வழங்கி வைத்த மல்லாகம் புனித சதா சகாய மாதா இளையோர் ஒன்றியத்தினர் எதிர்வரும் காலங்களில் பல்வேறு சமூகப் பணிகளில் ஈடுபடவுள்ளதாக மல்லாகம் புனித சதா சகாய மாதா நிர்வாகத்தின் செயலாளர் அ. ஹிமால் தெரிவித்துள்ளார்.

அத்துடன் வருடம் தோறும் இரத்ததான முகாம் நிகழ்வுகளை ஏற்பாடு செய்து நடாத்துவதற்குத் தீர்மானித்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
“அதிரடி” இணையத்துக்காக யாழில் இருந்து “கலைநிலா”

You might also like

Leave A Reply

Your email address will not be published.

19 − 14 =

*