;
Athirady Tamil News

இனவாதத்தை பரப்பி வாக்கு பெறலாம் என்ற கருத்து நிலவி வருகின்றது – ரிசாட்.!!

0

இனவாதத்தை பரப்பி வாக்கு பெறலாம் என்ற கருத்து நிலவி வருகின்றது. ரிசாட் பதியுத்தீன்

இனவாதங்களை பரப்புவதனூடாக வாக்குகளை பெறலாம் என்கின்ற கருத்து அண்மைக்காலமாக நமது நாட்டில் நடந்து வருகின்றது. இனவாத சிந்தனையை வளர்ப்பதனூடாக ஒரு இனத்தின் அழிவை அல்லது ஒரு இனத்தின் வேதனையை இன்னோர் இனத்துக்கு சொல்லி அதனூடாக வாக்கு சேகரிக்கலாம் என்று கடந்தகால செயற்பாடுகளை நாங்கள் பார்க்கின்றோம்.

ஆனால் இன்று கருணாவோடு இணைந்த அணியினர் தமிழ் மக்கள் மத்தியில் ஒரு பேச்சையும் அவரை சார்ந்த அரசாங்கத்தை சேர்ந்த சிங்கள மக்களிடம் இன்னுமொரு பேச்சையும் பேசுவதை நாங்கள் பார்க்கின்றோம்.
இந்த நாட்டில் தமிழ் முஸ்லீம் சிங்கள மக்கள் ஒற்றுமையாக வாழ வேண்டும் என்ற உணர்வோடு உள்ளவர்கள் ஒவ்வொரு இனத்துக்கும் இவ்வோரு விதமாக பேசமாட்டார்கள்.

ஒவ்வொரு மொழியிலும் ஒவ்வொரு விதமாக பேசமாட்டார்கள். ஆகவே நாங்கள் வேண்டிக்கொள்வதெல்லாம். பெரும்பான்மை மக்களும் சிறுபான்மை மக்களும் ஜதார்த்தத்தை புரிந்து இந்த நாட்டில் எல்லோரும் ஏற்றுக்கொள்ளக்கூடிய எல்லோரும் ஒற்றுமையாக வாழக்கூடிய ஜனநாயகம் மிளிரக்கூடிய நல்லதொரு ஆட்சிக்காக நல்லதொரு பாராளுமன்றத்திற்காக வாக்களிக்க வேண்டும்.

கடந்த காலத்தில் 5 பாராளுமன்ற உறுப்பினர்களை வைத்துக்கொண்டு பணியாற்றினோமோ எவ்வாறு எமது கடமையை மனச்சாட்சியோடும் நேர்மையோடும் எம்மை தெரிவு செய்த மக்களுக்கும் அதேபோல் தெரிவு செய்யாத மக்களுக்கும் எங்கள் கடமையை ஆற்றியிருக்கின்றோம்.
அதுபோலவே எதிர்காலத்திலும் இதைவிட இரண்டு மடங்கு ஆசனத்தினை இந்த மக்கள் எமக்கு துருவார்கள் என்ற நம்பிக்கை எமக்குள்ளது. அவ்வாறு தருகின்றபோது எவ்வாறு எமது மக்களை திருப்திப்படுத்த முடியும் அவர்களின் தேவைகள் உரிமைகள் சார்ந்த விடயங்களை எவ்வாறு செய்யலாம் என திட்டமிட்டிருக்கின்றோம். அவற்றை நாம் செய்து காட்டுவோம்.

சமூக இடைவெளி என்பது அல்லது கொரனா கொவிட் 19 என்பது இந்த தடைகள் என்பது அழுத்தங்கள் எல்லாம் எதிர்க்கட்சிகளுக்கு மாத்திரம்தான் சட்டமாக இருக்கின்றதே தவிர ஆளும் தரப்புக்கு இது சட்டமல்ல. ஊரடங்கு சட்ட காலத்திலும் அவர்கள் தேர்தல் பிரசாரத்தினை முன்னெடுத்தார்கள். அவர்களுக்கு அரச அதிகாரிகள் பாதுகாப்பு அதிகாரிகள் என எல்லோரும் அவர்களுக்கு பெரிய ஒத்துழைப்பை வழங்குகின்ற நிலையை நாங்கள் பார்க்கின்றோம்.
எதிர்க்கட்சியில் இருப்பதால் நாங்கள் மட்டும்தான் இந்த சட்டத்தினை பேண வேண்டும் என அரச தரப்பு மிகவும் கடுமையாக இருக்கின்றது.
“அதிரடி” இணையத்துக்காக வவுனியாவில் இருந்து “இதயசந்திரன்”

You might also like

Leave A Reply

Your email address will not be published.

one × 3 =

*