;
Athirady Tamil News

ரஷ்யாவில் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 9 ஆயிரத்தைத் தாண்டியது..!!!

0

கொரோனா வைரசின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. உலகம் முழுவதும் கொரோனா வைரசால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை ஒரு கோடியை கடந்துள்ளது. வைரஸ் தொற்றுக்கு இதுவரை 5 லட்சத்துக்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர்

உலகை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் அமெரிக்கா, பிரேசிலைத் தொடர்ந்து ரஷ்யாவிலும் வேகமெடுத்து வருகிறது. கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகள் வரிசையில் ரஷ்யா 3-வது இடத்தில் உள்ளது.

இந்நிலையில், ரஷ்யாவில் கொரோனா வைரஸ் தொற்றினால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 9 ஆயிரத்தைத் தாண்டியுள்ளது.

ரஷ்யாவில் கடந்த 24 மணி நேரத்தில் 6 ஆயிரத்து 791 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் அங்கு வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 6 லட்சத்து 34 ஆயிரத்து 437 ஆக அதிகரித்துள்ளது.

மேலும், கொரோனா வைரஸ் தொற்றுக்கு 104 பேர் பலியாகினர். இதையடுத்து, அங்கு பலியானோர் எண்ணிக்கை 9 ஆயிரத்து 073 ஆக உயர்ந்துள்ளது. கொரோனா தொற்றில் இருந்து 3.99 லட்சத்துக்கும் மேற்பட்டோர் குணமடைந்துள்ளனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

five × 5 =

*