;
Athirady Tamil News

நாகலாந்தில் ஜூலை 15-ந்தேதி வரை ஊரடங்கு நீட்டிப்பு..!!

0

நாகலாந்தில் கொரோனா தொற்று நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. அங்கு நேற்று ஒரே நாளில் 18 ராணுவ வீரர்கள் உள்பட 19 பேருக்கு கொரோனா உறுதியானது. எனவே கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 434 ஆக உயர்ந்துள்ளது.

இதற்கிடையே கொரோனா அதிகமாக பரவி வருவதால் நாகலாந்தில் ஊரடங்கு ஜூலை 15-ந்தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், விவசாயம், அத்தியாவசிய தேவை, வழிபாட்டுத்தலங்கள் திறப்பு, கார், ஆட்டோ ஓட அனுமதி என சில தளர்வுகள் நீடிக்கும் என்று அரசு கூறியுள்ளது.

இருப்பினும் வெளிமாநிலத்தவரால் நோய் பரவுவதை தடுக்க அண்டை மாநிலங்களான அசாம், மணிப்பூர் மற்றும் அருணாசலப்பிரதேச எல்லைகள் மூடப்படும் என்றும், அங்கு பாதுகாப்பு பணியில் கூடுதல் போலீசார் பணியமர்த்தப்படுவார்கள் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா தடுப்பு பணிகள் குறித்து முதல்-மந்திரி தலைமையில் அதிகாரிகள், மந்திரிகள் கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தின் முடிவின்படி, ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

fifteen + six =

*