;
Athirady Tamil News

6 ரபேல் போர் விமானங்கள் 27-ந் தேதிக்குள் இந்தியா வருகை..!!

0

பிரான்ஸ் நாட்டை சேர்ந்த டசால்ட் ஏவியேசன் நிறுவனம், உலகின் அதிநவீன வசதிகள் நிறைந்த ரபேல் போர் விமானங்களை வடிவமைத்து வருகிறது. அந்த நிறுவனத்திடம் 36 ரபேல் போர் விமானங்களை ரூ.58 ஆயிரம் கோடி மதிப்பில் இந்தியா வாங்குகிறது.

இதற்காக, கடந்த 2016-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் பிரான்ஸ் அரசுடன் இந்தியா ஒப்பந்தம் செய்து கொண்டது. கொரோனா வைரஸ் பரவல் காரணமாக, இந்த விமானங்களை இந்தியாவிடம் ஒப்படைப்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், முதல்கட்டமாக 6 ரபேல் போர் விமானங்கள், ஜூலை 27-ந் தேதிக்குள் இந்தியா வருகின்றன. இந்த விவகாரத்துடன் தொடர்புடையவர்கள் இந்த தகவலை தெரிவித்தனர்.

கடந்த 2-ந் தேதி, பிரான்ஸ் நாட்டு ராணுவ மந்திரி பிளாரன்ஸ் பார்லியுடன் இந்திய ராணுவ மந்திரி ராஜ்நாத்சிங் தொலைபேசியில் பேசினார். அப்போது, கொரோனா வைரஸ் அச்சுறுத்தலையும் மீறி, திட்டமிட்ட காலத்துக்குள் ரபேல் போர் விமானங்கள் இந்தியாவிடம் ஒப்படைக்கப்படும் என்று பிளாரன்ஸ் பார்லி உறுதி அளித்தார்.

முதலாவதாக வரும் 6 ரபேல் விமானங்களையும் பஞ்சாப் மாநிலம் அம்பாலாவில் உள்ள விமானப்படை நிலையத்தில் நிறுத்தி வைக்க திட்டமிடப்பட்டுள்ளது. அதற்கு தேவையான கட்டமைப்பு வசதிகளும், பராமரிப்பு வசதிகளும் அங்கு செய்யப்பட்டுள்ளன.

அடுத்தகட்டமாக வரும் ரபேல் விமானங்கள், மேற்கு வங்காள மாநிலம் ஹசிமராவில் உள்ள விமான தளத்தில் நிறுத்தி வைக்கப்படும். 2 இடங்களிலும் ரூ.400 கோடி செலவில் கட்டமைப்பு வசதிகள் செய்யப்பட்டுள்ளன.

இந்தியா வாங்கும் ரபேல் விமானங்கள், அதிநவீன ஆயுதங்களை ஏந்திச் செல்லக்கூடியவை. ஐரோப்பிய தயாரிப்பான வானில் இருந்து வானில் உள்ள இலக்கை தாக்கும் ‘மெட்டியுர் ஏவுகணை’, ‘ஸ்கால்ப்’ குரூஸ் ஏவுகணை ஆகியவை பொருத்தப்பட்டு இருக்கும். ரேடார் எச்சரிக்கை கருவிகளும் இருக்கும். இந்தியாவின் தேவைக்கு ஏற்ப மாற்றங்களும் செய்யப்பட்டுள்ளன.

இந்த விமானங்கள், இந்தியாவின் ஒட்டுமொத்த போர்த்திறனை மேலும் அதிகரிக்கும் என்றும், இந்தியாவின் எதிரிகளுக்கு அச்சத்தை உண்டாக்கும் என்றும் ராணுவ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

சீன எல்லையில் பதற்றம் நிலவி வரும் நேரத்தில், இந்த போர் விமானங்கள் வருவது முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

sixteen − 8 =

*