;
Athirady Tamil News

நீங்க என்ன ஜட்ஜா?கோர்ட்டா? ஏழரை வருஷமா கண்டுக்கல இப்போ எதுக்கு வர்றாங்க.. வெளுத்து வாங்கிய வனிதா! (வீடியோ, படங்கள்)

0

தன்னைப் பற்றி கமெண்ட் அடிக்க நீங்கள் என்ன ஜட்ஜா அல்லது கோர்ட்டா என கேட்டு வெளுத்து வாங்கியிருக்கிறார் நடிகை வனிதா. அதோடு பீட்டர் பாலின் முதல் மனைவியையும் சரமாரியாக தாக்கியிருக்கிறார்.

நடிகை வனிதா தனது திருமணம் குறித்து சமூக வலைதளங்களில் கருத்து தெரிவிப்பவர்களையும் பீட்டர் பாலின் முதல் மனைவியான எலிசபெத் ஹெலனையும் விளாசி தனது யூட்யூப் சேனலில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

48 நிமிடம் வரை உள்ளது அந்த வீடியோ. அதில் தனக்கும் பீட்டர் பாலுக்கும் இடையிலான உறவு குறித்தும், பீட்டர் பாலுக்கும் அவரது முதல் மனைவி ஹெலனுக்கு இடையே உள்ள பிரச்சனை குறித்தும் பேசியுள்ளார்.

ஆம்பளையே கிடையாது

அவர் கூறியிருப்பதாவது, பீட்டர் பாலுக்கும் அவரது மனைவிக்கும் இடையே பெரிய பிரச்சனை உள்ளது. அதனால்தான் ஏழரை வருடங்களாக எந்த பேச்சுவார்த்தையும் இல்லை. அவர்களுக்குள் என்ன பிரச்சனை என்றும் அவர் என்னிடம் முழுசா பிரச்சனையை சொல்லவில்லை. எக்ஸ் வொய்ஃப் பத்தி தப்பா பேசுறவங்க ஆம்பளையே கிடையாது.

நானே புரிஞ்சுக்கிட்டேன்

அவரு அதனால என்கிட்ட ஒரு டீசன்ட் மேனர்ல பட்டும் படாமல் பேசினார். நானே புரிஞ்சிக்கிட்டேன். பிக்பாஸ் தர்ஷன் – சனம் ஷெட்டி விஷயத்துலேயும் நான் அதைத்தான் சொன்னேன். ஏதோ பெரிய பிரச்சனை இருக்குன்னு எனக்கு தெரியும். கணவன் மனைவி இடையே ஏழரை வருஷமா எந்த தொடர்பும் இல்லை. அவங்க அம்மாக்கிட்டேயும் பேசிருக்கிறேன். பசங்கக்கிட்டேயும் பேசியிருக்கிறேன்.

முடங்கி கிடக்கு

அவங்களுக்குள்ள எந்த தொடர்பும் இல்லை என்பது எனக்கு ஆணித்தரமாக தெரியும். முக்கியமான வழக்குகளைதான் ஹைகோர்ட் விசாரிக்கிறது. குடும்ப நீதிமன்றங்கள் பூட்டி கிடக்கிறது. லாயர்ஸ்களுக்கு வேலையே இல்லை. விவாகரத்து, திருமணம் பதிவு, ஜாமின், இப்படி எதையும் செய்ய முடியாது. கொரோனா காரணமாக எல்லா வேலையும் முடங்கி கிடக்கிறது.

கையெழுத்து போட்டுள்ளனர்

பீட்டர் பால் திருமணம் செய்து கொள்வதை பற்றி அவருடைய மனைவியிடம் பேசினார். அதற்கு பிள்ளைகள் பெயரில் தலா 5 லட்சம் பணம் போடுவதாகவும், 25 சவரன் நகை கொடுக்க வேண்டும் என்றும் பேசி முடித்துள்ளார்கள். அதில் கையெழுத்தும் போட்டுள்ளனர். ரொம்ப சந்தோஷமா இருக்கேன். எனக்கு சந்தோஷமா இருப்பதற்கான உரிமை எனக்கு உள்ளது.

எதுக்கு அவ்ளோ வாய்

என்னை பற்றி நீங்கள் அடிக்கும் கமெண்ட்டுகளை பார்க்கும் போது சிரிப்பா வருகிறது. முதல் கணவருக்கு தெரியுமா? இரண்டாவது கணவருக்கு தெரியுமான்னு கேட்குறீங்க? டைவர்ஸ் ஆயிடுச்சுன்னா என்ன ஆகும்னு தெரியுமா? ஏழரை வருஷம் பிரிஞ்சு இருந்தா என்ன ஆகும்னு தெரியுமா? சட்டத்தப் பத்தி ஒரு இதுவும் தெரியாது அப்புறம் எதுக்கு உங்களுக்கு அவ்வளோ வாய்.

திடீர்னு எங்கே இருந்து வந்தாங்க?

நீங்க என்ன ஜட்ஜா? நீங்க கோர்ட்டா எதுக்கு கமெண்ட் அடிக்கிறீங்க? யாரோ ரெண்டு பேருக்குள்ள பிரச்சனை. யாருன்னே தெரியாது. திடீர்னு ஹேஷ்டேக் போட்டு ட்ரென்ட்டாக்குறாங்க. ஏழரை வருஷமா எந்த காண்டக்ட்டுமே இல்ல இப்போ எங்கேயிருந்து வந்தாங்க. இப்போ எதுக்கு வர்றாங்க. இவ்ளோ வருஷமாக புருஷன் சாப்டாரா, தூங்குனாறா? உடம்பு எப்டி இருக்கு, எங்கே இருக்காரு, எப்படி இருக்காருன்னு ஒன்னும் கேட்கல.

நீங்க பார்த்தீங்களா?

பையன் மட்டும்தான் பேசுவான். பொண்ண கூட அப்பாக்கிட்ட பேச விடல. அந்த பையன் எல்லாத்தையும் சொல்லியிருக்கான். அவனும் ஒரு லிமிட்டோடதான் பேசுவான். ஏதோ ஒரு காரணம் சொல்லிட்டுதான் என்னை வந்து பார்த்தான். ஆகையால் எல்லா குற்றச்சாட்டுக்களுமே பொய். உங்களுக்கு தெரியுமா அவரு பசங்கல பார்க்கல பீஸ் கட்டலன்னு. அவரோட பேங்க் ஸ்டேட்மெண்ட் ரிலீஸ் பண்ணட்டுமா உங்களுக்கு.

அட்வைஸ் பண்ண வேண்டாம்

தேவையில்லாமா கமெண்ட் பண்ணாதீங்க. அந்த இன்விடேஷன் தேவையில்லாம ஷேர் ஆயிடுச்சு. என் குழந்தைங்கள எப்படி வளர்க்கணும்னு எனக்கு தெரியுமே. என் குழந்தைங்க பேசுறத பத்தி யாரும் பேச வேண்டாம். யாரும் யாருக்கும் அட்வைஸ் பண்ண வேண்டாம். இவ்ளோ நாளா இல்லாத ஒரு ஆள் இப்போ எங்கிருந்து வந்தாங்க. ஹேஷ்டேக் ட்ரென்ட் பண்ணி இத்தனை வருஷமா அவரு சம்பாதிச்ச பேர ஸ்பாயில் பண்ணிட்டாங்க.

பணம்தான் பிரச்சனை

இப்படி ஒரு விஷயம் பிரச்சனை ஆக போகுதுன்னு கூட எங்களுக்கு தெரியாது. பணம் மட்டும்தான் அவங்களுக்கு பிரச்சனைன்னு தெரியுது. இப்போதைய சூழ்நிலையில் சட்டப்படி கல்யாணம் பண்ண முடியாது. சென்டிமென்ட்டா அந்த நாள் பிக்ஸ் பண்ணியாச்சு, அதுல கல்யாணம் பண்ணிப்போம்னு பண்ணிக்கிட்டோம். ஃபாஸ்டர் கூட வரல, ரிஜிஸ்டர் வரல குடும்பத்துல உள்ள ஒரு ஓல்டு லேடி எங்களுக்கு கல்யாணம் பண்ணி வச்சாங்க.


உண்மையா காதலிக்கிறேன்

நான் 7 வருஷம் கழிச்சு நான் டைவர்ஸ் வாங்கினேன். இவ்ளோ நாள் கழிச்சு கல்யாணம் பண்ணியிருக்கேன். லவ்வ செலிபிரேட் பண்ண அச்சப்படக்கூடாது. நான் அவர உண்மையா காதலிக்கிறேன். அவரு கூட வாழ ஆசைப்படுறேன். என் குழந்தைங்கள அவரு நல்லா பாத்திருப்பாரு. அவரு ஒரு மென்மையான மனிதர். அவரு மனைவிக் கூட என்ன பிரச்சனைன்னு உண்மையான காரணம் தெரிஞ்சாதான் பேசலாம் என காட்டமாக கூறியுள்ளார் வனிதா.அந்தக் கடவுளுக்கே ரெண்டு பொண்டாட்டி.. இதெல்லாம் கல்ச்சரா.. அதகளம் செய்யும் வனிதா! (வீடியோ, படங்கள்)

முறையாக விவாகரத்து அளிக்கவில்லை.. முதல் மனைவி புகார்.. வனிதாவின் மூன்றாவது கணவருக்கு சிக்கல்!! (வீடியோ, படங்கள்)

கிறிஸ்தவ முறைப்படி பீட்டர் பாலை கரம்பிடித்தார் வனிதா.. லிப்லாக்குடன் களைக்கட்டிய திருமணம்! (வீடியோ, படங்கள்)

பிக்பாஸ்தான் முக்கியம்.. மகளை ஒப்படைக்க சம்மதம்.. 3 மணி நேரத்துக்குப்பின் முடிவு எடுத்த வனிதா..!! (படங்கள் & வீடியோ)

பிக்பாஸ் வீட்டில் உள்ள வனிதா எந்த நேரமும் கைது செய்யப்பட வாய்ப்பு.. தெலுங்கானா போலீஸ் அதிரடி..!!

சினிமா, சீரியலில்தான் அவர் நல்லவர்.. நிஜத்தில் என்ன செய்தார் தெரியுமா.. விஜயகுமாரை விளாசிய வனிதா..!! (வீடியோ)

You might also like

Leave A Reply

Your email address will not be published.

20 − four =

*