;
Athirady Tamil News

வவுனியாவில் தனிமைப்படுத்தப்பட்ட ஒருவருக்கு கொரோனா!!

0

வெளிநாடுகளில் இருந்து இலங்கை திரும்பிய நிலையில் வவுனியா வேலங்குளம் தனிமைப்படுத்தல் முகாமில் தங்க வைக்கப்பட்டிருந்த ஒருவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ்தாக்கம் காரணமாக பல்வேறு நாடுகளிலும் பாதிக்கப்பட்டுள்ள இலங்கையர்களை நாட்டிற்கு அழைத்துவரும் செயற்பாடுகள் அரசினால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

இந்நிலையில் அமெரிக்கா,டுபாய், சிங்கப்பூர் போன்ற நாடுகளில் சிக்கித்தவித்த இலங்கையர்கள் விசேட விமானங்களின் மூலம் நாட்டிற்கு அழைத்துவரப்பட்டனர்.

அவர்களில் நாடு திரும்பிய 300 ற்கும் மேற்பட்டோர்
வவுனியா வேலங்குளம் மற்றும் பம்பைமடு இராணுவ முகாம்களில் அமைக்கப்பட்டுள்ள தனிமைப்படுத்தல் மையங்களுக்கு கொண்டுவரப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டிருந்தனர்.

இவர்களுக்கான பி.சி.ஆர் பரிசோதனைகள் சுகாதார தரப்பினரால் மேற்கொள்ளப்பட்டுவருகின்றது.

இந்நிலையில் இன்றயதினம் வேலங்குளம் தனிமைப்படுத்தல் மையத்தில் தங்கவைக்கப்பட்டிருந்த 46 பேருக்கான பிசிஆர் பரிசோதனைகள் யாழ் போதனா வைத்தியசாலையில் முன்னெடுக்கப்பட்டது.

பரிசோதனை முடிவுகளின்படி ஒருவருக்கு கொரனா தொற்று உள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதனையடுத்து தொற்றிற்குள்ளானவரை வெலிகந்த கொரனோ தடுப்பு சிகிச்சை நிலையத்திற்கும் அனுப்பி வைக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
“அதிரடி” இணையத்துக்காக வவுனியாவில் இருந்து “இதயசந்திரன்”

You might also like

Leave A Reply

Your email address will not be published.

2 × four =

*