;
Athirady Tamil News

வவுனியாவில் ஜக்கிய மக்கள் சக்தியின் பிரச்சார கூட்டம்; வெறிச்சோடி காணப்படும் கதிரைகள்!! (படங்கள்)

0

வவுனியாவில் ஜக்கிய மக்கள் சக்தியின் பிரச்சார கூட்டம் : பல மணிநேரமாக வெறிச்சோடி காணப்படும் கதிரைகள்

வவுனியா நகரசபை கலாச்சார மண்டபத்தில் ஜக்கிய மக்கள் சக்தியின் பிரச்சார கூட்டம் இன்றையதினம் (01.07.2020) காலை 8.00 மணிக்கு ஆரம்பமாகவிருந்த நிலையில் 9.15 மணியாகியும் அரசியல்வாதிகளிள் கதிரைகள் உட்பட மக்களின் கதிரைகளும் வெறிச்சோடி காணப்படுகின்றது.

ஜக்கிய மக்கள் சக்தியின் தேர்தல் பிரச்சார கூட்டத்தில் சஜீத் பிரேமதாசா மற்றும் ரிஷாட் பதியுதீன் ஆகியவர்கள் வவுனியாவில் காலை 8.00 மணிக்கும் மன்னார் மாவட்டத்தில் காலை 10.00 மணிக்கும் கலந்து கொண்டு சிறப்புரையாற்றுவர்கள் என தெரிவிக்கப்பட்டிருந்த போதிலும் காலை 9.15 மணியாகியும் வவுனியாவில் இடம்பெறவுள்ள தேர்தல் பிரச்சார கூட்டத்தில் அரசியல்வாதிகள் கலந்து கொள்ளவில்லை

அரசியல்வாதிகளின் கதிரைகள் உட்பட மக்களின் கதிரைகளும் வெறிச்சொடி காணப்படுவதினை அவதானிக்ககூடியதாகவுள்ளது.

இக் குறித்த கூட்டத்திற்கு வருகை தருபவர்களை பரிசோதனை மேற்கொள்ளவதற்கு மண்ட வாயிலில் விசேட அதிரடிப்படையினர் மற்றும் பொலிஸார் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

“அதிரடி” இணையத்துக்காக வவுனியாவில் இருந்து “கோபி”

ரிசாட் பதியூதின் தேர்தல் பிரசார கூட்டத்தில் கடும் சோதனை!! (படங்கள்)

You might also like

Leave A Reply

Your email address will not be published.

eighteen − 1 =

*