;
Athirady Tamil News

துபாயில் இந்திய துணைத்தூதராக டாக்டர் அமன் புரி நியமனம்..!!

0

துபாய் இந்திய துணைத்தூதரகத்தில் துணைத்தூதர் பதவியில் இருந்த விபுல் தனது பதவி காலம் நிறைவடைந்து புதுடெல்லி செல்கிறார். விபுல் கடந்த 1998- ம் ஆண்டு இந்திய ஆட்சிப்பணி தேர்வில் தேர்ச்சி பெற்று வெளியுறவுத்துறையில் பணியில் சேர்ந்தார்.

அதன் பிறகு கெய்ரோ, கொழும்பு மற்றும் ஜெனீவா போன்ற இடங்களில் தூதரக அதிகாரியாக பணியாற்றினார். அதன் பிறகு கடந்த 3 ஆண்டுகளாக இந்திய வெளியுறவுத்துறை மந்திரி அலுவலகத்தில் இணை செயலாளராக பணியாற்றினார். பணிக்காலம் நிறைவடைந்ததை தொடர்ந்து அவர், வருகிற 7-ந் தேதி வந்தே பாரத் மீட்பு விமானத்தில் இந்தியா செல்கிறார்.

இந்த நிலையில் துபாயிக்கு புதிய இந்திய துணைத்தூதராக அமன் புரி (வயது 44) நியமனம் செய்யப்பட்டுள்ளார். இவர் பல் டாக்டராவார். கடந்த 2003-ம் ஆண்டில் இந்திய ஆட்சிப்பணியில் தேர்ச்சி பெற்று தூதரக பணியில் சேர்ந்தார். இவர் 2005-ம் ஆண்டு முதல் 2008-ம் ஆண்டு வரை ஐரோப்பிய யூனியன் பகுதிகளான பெல்ஜியம், லூக்செம்பர்க் உள்ளிட்ட இடங்களில் பணியாற்றினார்.

அதன்பிறகு மீண்டும் இந்தியாவின் சண்டிகார் பகுதியில் பாஸ்போர்ட் அலுவலக அதிகாரியாக 2009- 2010 ஆண்டுகளில் பணியாற்றினார். அதன்பிறகு கடந்த 2010-ம் ஆண்டு முதல் 2013-ம் ஆண்டு வரை பிரதம மந்திரியின் வெளிநாட்டு பயணங்களுக்கான ஏற்பாடுகளை செய்யும் முக்கிய பொறுப்பில் இருந்தார்.

மேலும் அவர் வெளிநாட்டில் இருந்து வரும் தலைவர்களை வரவேற்கும் முக்கிய பொறுப்பில் இருந்தார். அதன் பிறகு புதுடெல்லியில் 2013-ம் ஆண்டு முதல் 2016-ம் ஆண்டு வரை மண்டல பாஸ்போர்ட் அலுவலகத்தில் அதிகாரியாக பணியாற்றினார். அதன்பிறகு இங்கிலாந்து நாட்டில் உள்ள பிர்மிங்காம் துணைத்தூதராக இருந்த டாக்டர் அமன் புரி துபாயின் துணைத்தூதராக நியமனம் செய்யப்பட்டுள்ளதாக துபாய் இந்திய துணைத்தூதரகம் அறிவித்துள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

ten − three =

*