;
Athirady Tamil News

ஜப்பானில் இருந்து 261 இலங்கையர்கள் நாடு திரும்பினர்!!

0

கொரோனா வைரஸ் தொற்று காரணமாக ஜப்பானில் சிக்கித் தவித்து வந்த 261 பேர் இன்று அதிகாலை நாடு திரும்பினர்.

ஸ்ரீ லங்கன் விமான சேவைக்கு சொந்தமான யு.எல்.455 ரக விமானத்தில் அவர்கள் இன்று அதிகாலை கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்ததாக அத தெரண செய்தியாளர் தெரிவித்தார்.

ஜப்பானுக்கு தொழில் நிமித்தம் சென்றிருந்த இலங்கையர்களே இவ்வாறு அழைத்து வரப்பட்டுள்ளனர்.

இவ்வாறு அழைத்து வரப்பட்டவர்கள் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து பீ.சீ.ஆர் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டதாக அத தெரண செய்தியாளர் தெரிவித்தார்.

இதேவேளை, வியட்நாமில் சிக்கியிருந்த 65 இலங்கையர்கள் நேற்றிரவு நாட்டுக்கு அழைத்து வரப்பட்டனர்.

வியட்நாம் விமான சேவைக்குத் சொந்தமான விசேட விமானம் மூலம் அவர்கள் நாட்டுக்கு அழைத்துவரப்பட்டதாக அவர் தெரிவித்தார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

4 × 5 =

*