;
Athirady Tamil News

வவுனியா இ.போ.ச சாலையில் 434லீற்றர் டீசல் மாயம் : பொலிஸார் விசாரணை!!

0

இலங்கை போக்குவரத்து சபை வவுனியா சாலையில் கடந்த செவ்வாய்க்கிழமை (30.06.2020) இரவு 434லீற்றர் டீசல் மாயமாகியுள்ளதாக வவுனியா பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இ.போ.ச வவுனியா சாலையில் கடமையாற்றும் ஊழியர்கள் பணி நிறைவடைந்து செவ்வாய்கிழமை மாலை வீடு திரும்பி அடுத்த தினம் புதன்கிழமை (01.07.2020) காலை கடமைக்கு திரும்பிய சமயத்தில் எரிபொருள் தாங்கியின் சீல் உடைக்கப்பட்டு 434லீற்றர் டிசல் திருடப்பட்டுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.

அதனையடுத்து இச் சம்பவம் தொடர்பில் வவுனியா பொலிஸ் நிலையத்தில் மெற்கொள்ளப்பட்ட முறைப்பாட்டினையடுத்து பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

அத்துடன் இலங்கை போக்குவரத்து சபையினரினாலும் ஊழியர்களிடம் உள்ளக விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன

“அதிரடி” இணையத்துக்காக வவுனியாவில் இருந்து “கோபி”

You might also like

Leave A Reply

Your email address will not be published.

seventeen − 9 =

*