;
Athirady Tamil News

வனிதா விஷயத்தில் நான் சொன்னதில் எந்த தவறும் இல்லை.. நச் பதிலடி கொடுத்த நடிகை லக்ஷ்மி ராமகிருஷ்ணன்! (வீடியோ, படங்கள்)

0

வனிதா விஷயத்தில் நான் சொன்னதில் எந்த தவறும் இல்லை நடிகை லக்ஷ்மி ராமகிருஷ்ணன் பதிலடி கொடுத்துள்ளார். நடிகை வனிதா கடந்த சனிக்கிழமை பீட்டர் பால் என்பவரை மூன்றாவது திருமணம் செய்தார். 7 மாதங்களுக்கு முன்பு யூட்யூப் சேனல் தொடங்கும் விஷயமாக வனிதாவுக்கு அறிமுகமாகி இருக்கிறார் பீட்டர் பால்.

இதனை தொடர்ந்து இருவருக்குள்ளும் காதல் மலர்ந்தது. இதனால் கடந்த சனிக்கிழமை கிறிஸ்தவ முறைப்படி வனிதா பீட்டர் பாலை தனது வீட்டிலேயே எளிமையாக நண்பர்கள் மற்றும் நெருங்கிய உறவினர்கள் முன்னிலையில் திருமணம் நடைபெற்றது.

மூன்றாவது திருமணம் சர்ச்சை

ஆனால் அடுத்த நாளே பீட்டர் பாலின் முதல் மனைவியான எலிசபெத் ஹெலன், தன்னை முறைப்படி விவாகரத்து செய்யாமல் தனது கணவர் இரண்டாவது திருமணம் செய்ததாக போலீஸில் புகார் அளித்தார். இதனை தொடர்ந்து வனிதாவின் மூன்றாவது திருமணமும் சர்ச்சைக்கு உள்ளானது.

நம்பிக்கையுடன் இருந்தேன்

இதனால் பலரும் சமூக வலைதளங்களில் கருத்து தெரிவித்து வந்தனர். அந்த வகையில் நடிகை லக்ஷ்மி ராமகிருஷ்ணனும் கருத்து தெரிவித்திருந்தார். அதாவது நான் உண்மையில் நம்பிக்கையுடன் இருந்தேன், அவர் இந்த உறவில் நன்றாக நிலைத்திருப்பார், அவர் கடினமான காலங்களை கடந்துவிட்டார்.

வருத்தமாக இருக்கிறது

அவருடைய அனுபவங்களைப் பற்றி குரல் கொடுத்தார். அவர் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என்று எல்லோரும் விரும்பினர், ஆனால் அவர் இந்த பகுதியை கவனிக்கவில்லை என்று வருத்தமாக இருக்கிறது!!! என பதிவிட்டிருந்தார்.

டிவி நிகழ்ச்சியல்ல

லக்ஷ்மி ராமகிருஷ்ணனின் இந்த பதிவை பார்த்த நடிகை வனிதா, பாலியல் துஷ்பிரயோகம் மற்றும் தற்கொலை பற்றி பேசும் உங்களின் வேலையை பாருங்கள். குடும்ப பிரச்சினைகளை அவர்களின் அனுமதியின்றி விவாதிப்பதை நிறுத்துங்கள். இது ஒன்றும் உங்கள் டிவி நிகழ்ச்சியல்ல என காட்டமாக டிவிட்டினார்.

எந்த தவறும் இல்லை

இந்நிலையில் ஊடகம் ஒன்றிற்கு பேட்டியளித்துள்ள நடிகை லக்ஷ்மி ராமகிருஷ்ணன், வனிதா விஷயத்தில் நான் பேசியதில் எந்த தவறும் இல்லை. அவர் வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என்றுதான் நான் ஆசைப்படுகிறேன். தனிப்பட்ட நோக்கத்தில் நான் அந்த கருத்தை பதிவிடவில்லை.

மறைமுக சாடல்

மறுமணம் செய்யும் யாராக இருந்தாலும், முறைப்படி அதற்கு முந்திய திருமணத்தை விவாகரத்து செய்திருக்க வேண்டும். இதைப்பற்றி தெரியாதவர்கள் என் நிகழ்ச்சிக்கு வாருங்கள் நான் சொல்லி தருகிறேன். படித்த சிலரே இதைப்பற்றி அறியாமல் உள்ளார்கள் அவர்களுக்கும் இதனை தெரிவிக்க ஆசைப்படுகிறேன் என வனிதாவை மறைமுகமாக சாடியுள்ளார்.

யார் அட்வைஸும் தேவையில்லை

நடிகை வனிதா தனது மூன்றாவது திருமணத்தை குறித்து யார் பேசினாலும் சமூக வலைதளங்களில் பொங்கி வருகிறார். தனக்கு அட்வைஸ் கூறுபவர்களையும் சரி தனது பிள்ளைகளுக்கு அட்வைஸ் செய்பவர்களையும் சரி, யாரும் எங்களுக்கு அட்வைஸ் பண்ண வேண்டாம் என முகத்தில் அடித்தார் போல் பேசி வருவது குறிப்பிடத்தக்கது.என் அப்பா விபச்சாரத்துக்கும் குடிக்கும் அதிகம் செலவு செய்வார்.. வனிதாவின் 3வது கணவர் மகன் திடுக்! (வீடியோ, படங்கள்)

நீங்க என்ன ஜட்ஜா?கோர்ட்டா? ஏழரை வருஷமா கண்டுக்கல இப்போ எதுக்கு வர்றாங்க.. வெளுத்து வாங்கிய வனிதா! (வீடியோ, படங்கள்)

அந்தக் கடவுளுக்கே ரெண்டு பொண்டாட்டி.. இதெல்லாம் கல்ச்சரா.. அதகளம் செய்யும் வனிதா! (வீடியோ, படங்கள்)

முறையாக விவாகரத்து அளிக்கவில்லை.. முதல் மனைவி புகார்.. வனிதாவின் மூன்றாவது கணவருக்கு சிக்கல்!! (வீடியோ, படங்கள்)

கிறிஸ்தவ முறைப்படி பீட்டர் பாலை கரம்பிடித்தார் வனிதா.. லிப்லாக்குடன் களைக்கட்டிய திருமணம்! (வீடியோ, படங்கள்)

பிக்பாஸ்தான் முக்கியம்.. மகளை ஒப்படைக்க சம்மதம்.. 3 மணி நேரத்துக்குப்பின் முடிவு எடுத்த வனிதா..!! (படங்கள் & வீடியோ)

பிக்பாஸ் வீட்டில் உள்ள வனிதா எந்த நேரமும் கைது செய்யப்பட வாய்ப்பு.. தெலுங்கானா போலீஸ் அதிரடி..!!

சினிமா, சீரியலில்தான் அவர் நல்லவர்.. நிஜத்தில் என்ன செய்தார் தெரியுமா.. விஜயகுமாரை விளாசிய வனிதா..!! (வீடியோ)

You might also like

Leave A Reply

Your email address will not be published.

two × three =

*