வவுனியா கோவிற்குளம் சிறுவர் இல்லத்தில் சடலமாக மீட்கப்பட்ட சிறுமி!! (படங்கள்)
வவுனியா கோவிற்குளம் அகிலாண்டேஸ்வரி சிறுவர் இல்லத்தில் இன்று (05.07.2020) மதியம் சிறுமி ஒருவரின் சடலத்தினை பொலிஸார் மீட்டெடுத்துள்ளனர்.
கோவிற்குளம் அகிலாண்டேஸ்வரி சிறுவர் இல்லத்தில் தங்கியிருக்கும் 16 வயதுடைய சிறுமியொருவர் இன்று மதியம் இல்லத்தின் மலசல கூடத்தில் தூங்கில் தொங்கிய நிலையில் சடலமாக காணப்பட்டதினையடுத்து . இவ்விடயம் தொடர்பில் பொலிஸாருக்கு தெரியப்படுத்தப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த வவுனியா பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டனர்
சடலம் பிரேத பரிசோதனைகளுக்காக வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
16 வயதுடைய ராஐசெல்லராணி என்ற சிறுமியே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டவராவர்.
“அதிரடி” இணையத்துக்காக வவுனியாவில் இருந்து “கோபி”