;
Athirady Tamil News

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் கரும்புலிகள் தினம் !! (படங்கள்)

0

கடும் இராணுவப் பிரசன்னம், புலனாய்வாளர்களின் கண்காணிப்பு ஆகியவற்றுக்கு மத்தியிலும் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் கரும்புலிகள் தினம் உணர்வு பூர்வமாக அனுஷ்டிக்கப்பட்டுள்ளது.

இன்று மாலை 6 மணியளவில் பல்கலைக்கழக வளாகத்தினுள், பிரத்தியேகமாக அமைக்கப்பட்ட இடம் ஒன்றில் இந்த நினைவேந்தல் நிகழ்வு இடம்பெற்றுள்ளது.

கரும்புலிகள் தினமான இன்று காலை முதல் குடாநாட்டின் பல பகுதிகளிலும் இராணுவம், பொலிஸ் விசேட அதிரடிப் படையினர் சுற்றிவளைப்பு – ரோந்து நடவடிக்கைகளுடன் ஈடுபட்டிருந்தனர்.

கரும்புலிகள் தினம் கொண்டாடப்படலாம் என்று கருதப்படும் இடங்களில் கடுங்காவலில் ஈடுபட்டதுடன் சிவில் உடையிலும் புலனாய்வாளர்கள் குவிக்கப்பட்டிருந்தனர். எனினும் அச்சுறுத்தல்களை மீறி பல்கலைக்கழகத்தில் கரும்புலிகள் தினம் கொண்டாடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.
“அதிரடி” இணையத்துக்காக யாழில் இருந்து “கலைநிலா”

You might also like

Leave A Reply

Your email address will not be published.

12 − one =

*