;
Athirady Tamil News

எமது போராட்டத்தை நலிவுற செய்தவர்கள் எமக்கு ஒரு போதும் வழிகாட்டியாக செயற்பட முடியாது – கலையரசன்.!! (வீடியோ, படங்கள்)

0

எமது போராட்டத்தை நலிவுற செய்தவர்கள் எமக்கு ஒரு போதும் வழிகாட்டியாக செயற்பட முடியாது அம்பாறை க்கு வந்து பைத்தியம் போல் கத்திக்கொண்டு திரிபவர்கள் தலைவராக முடியாது என முன்னாள் கிழக்கு மாகாணசபை உறுப்பினரும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் சார்பில் போட்டியிடும் தவராசா கலையரசன் நேற்று மாலை மத்திய முகாம் பிரதேசத்தில் இடம்பெற்ற கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே இந்த கருத்தை தெரிவித்தார்.

சிங்கள பேரினவாத அரசு ஒப்பந்த அடிப்படையில் சில அரசியல் வாதிகளை அம்பாறை மாவட்டத்தில் களமிறக்கியிருக்கின்றது . இவர்களால் தமிழர்களுக்கு என்ன நிலைமை நிகழ போகின்றது எமது முதுநிலை தமிழர்கள் சொல்லியிருப்பார்கள்.

ஒப்பந்த அடிப்படையில் கடந்த காலத்தை சிதைத்த சில அரசியல்வாதிகள் தமிழ் தேசிய கூட்டமைப்பை கீழ்த்தரமாக விமர்சித்து வருகின்றனர். தமிழ் தேசியக் கூட்டமைப்பைத் தவிர வேறு விடயங்களைச் சொல்லி மக்களை அணிதிரட்ட முடியாதா என்ற கேள்வியை நாங்கள் எழுப்பவேண்டும் நாங்கள் யாரையும் விமர்சனம் பண்ணவில்லை நாங்கள் சரியான பாதையில் சென்று கொண்டிருக்கிறோம் அரசியல் பயணத்தில் பல ஏமாற்றங்களை பின்னடைவை சந்தித்தாலும் எமது தமிழ் மக்களைப் பொறுத்தளவில் சிறந்த அரசியல் முன்னகர்வு செய்து கொண்டிருக்கின்றோம்.

நாங்கள் பொய்யை மெய்யாக்கி மெய்யை பொய்யாக்கி அரசியல் செய்தவர்கள் அல்ல. இலங்கையிலே மிக வறுமையான மாவட்டமாக மட்டக்களப்பு மாவட்டம் விளங்குகின்றது அங்கு பல அபிவிருத்திப் பணிகள் செய்ய வேண்டி இருக்கும் போது பெரும்பான்மை தமிழர்கள் வாழும் மட்டு மாவட்டத்தில் அங்கே மக்களால் போட்டியிட முடியாமல் விரட்டியடிக்கப்பட்டிருக்கின்றார். அம்பாறை மாவட்டத்திற்கு திட்டமிடப்பட்டு ஒரு அரசியல்வாதி திறக்கப்பட்டு இருக்கிறார் என்றால் நாங்கள் சிந்திக்க வேண்டும்.

உள்ளுராட்சி மன்ற சட்ட திட்டங்கள் அறியாத ஒருவர் பத்து வருடங்கள் பிரதியமைச்சராக இருந்திருக்கின்றார் என்பதை நினைத்து நான் வெட்கப்படுகிறேன் உள்ளுராட்சி மன்ற சட்டம் என்பது என்னால் இயற்றபட்ட ஒன்றல்ல.

ஒரு தவிசாளர் விடுமுறையில் சென்ற காலத்தில் அதற்கு அடுத்த படியாக இருக்கும் பிரதி தவிசாளர் அதன் பணிகளை மேற்கொள்வார் ஆனால் அதற்காக அவர் தவிசாளர் ஆக முடியாது.
25க்கும் மேற்பட்ட தவிசாளர்கள் இந்த பாராளுமன்ற தேர்தலில் வேட்பாளர்களாக களமிறங்கியிருக்கிறார்கள் அவர்களுக்கு பதிலாக பிரதி தவிசாளர் இயங்கிக் கொண்டிருக்கிறார்கள்.

82 வீதம் முஸ்லிம்கள் வாழும் பொத்துவில் பிரதேசத்தில் தமிழர் ஒருவர் பதில் சாவிசாளராக இருக்கின்றார்.
இதனை அ அறியாமல் பைத்தியம் பிடித்தவர்கள் போன்றும் பேசிக் கொண்டிருக்கிறார்.

இன்று மட்டக்களப்பு மாவட்டத்தில் என்ன நடக்கின்றது என்பதை அறிந்து கொள்ளவில்லை என நினைக்கிறேன். வெல்லாவெளி கிராம் தொல்பொருளுக்காக அடையாளம் காணப்பட்டு முடிந்தால் வீரம் பேசும் பிரதியமைச்சர் அதை தடுத்து நிறுத்த முடியுமா? இதனை கூட தடுப்பதற்கான ஒரே ஒரு சக்தி நாங்கள்தான்.

நாங்கள் உரிமையோடு நிலையான அபிவிருத்தியை மேற்கொள்ள பல வேலைத்திட்டங்களை முன்னெடுத்து வருகின்றோம். யாருக்கும் சோரம் போக மாட்டோம் .எங்களது மக்களின் இலட்சிய சிந்தனையில் பயணித்து கொண்டிருக்கும் எங்களை திட்டமிட்டு சிதைப்பதற்கு பேரினவாதம் கங்கணம் கட்டி செயற்படுகிறது.
நாவிதன்வெளி பிரதேச சபை தவிசாளர் பதவியை மாற்று சமூகத்திற்கு தாரை வார்த்து போல் பேசுகின்றனர் இன்றும் நானே தவிசாளர் நான் பொதுத்தேர்தலில் போட்டியிடுவதால் விடுமுறையில் இருக்கின்றேன்.

எமது போராட்டத்தை நலிவுற செய்தவர்கள் எமக்கு ஒரு போதும் வழிகாட்டியாக செயற்பட முடியாது.அவரது சுயநலன்களை பூர்த்தி செய்ய அரசாங்கம் செல்ல பிள்ளையாக செயற்படுகிறது என தெரிவித்தார்.
“அதிரடி” இணையத்துக்காக மட்டக்கிளப்பில் இருந்து “மட்டுநகரான்”

You might also like

Leave A Reply

Your email address will not be published.

1 × four =

*