;
Athirady Tamil News

கைது செய்யப்பட்ட நபர் பேசாலை பொலிஸாரிடம் கையளிக்கப்பட்டார்.!!

0

யாழ்ப்பாணம் மரியன்னை ஆலயத்தில் (பெரிய கோயில்) வைத்து இன்று பிற்பகல் கைது செய்யப்பட்ட நபர் பேசாலை பொலிஸாரிடம் கையளிக்கப்பட்டார்.

பேசாலை தேவாலயத்துக்குள் நேற்றுமுன்தினம் நுழைந்து சந்தேகத்துக்கு இடமான வகையில் நடமாடிய நிலையில் இந்த நபர் பேசாலை பொலிஸாரால் தேடப்பட்டு வந்தார்.

அதனடிப்படையிலேயே அந்த நபர் மீது யாழ்ப்பாணத்தில் வழக்குகள் எவையும் இல்லாத நிலையில் பேசாலை பொலிஸாரிடம் கையளிக்கப்பட்டார் என்று பொலிஸார் தெரிவித்தனர்.

மன்னார் வங்காலையைச் சேர்ந்த அலோசியஸ் ஸ்ரீபவன் வாஸ் என்பவரே இவ்வாறு பேசாலை பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டார்.

அவரது மனநிலை தொடர்பில் மருத்துவ பரிசோதனைக்கு உள்படுத்த யாழ்ப்பாணம் பொலிஸாரால் நடவடிக்கை எடுக்கப்பட்டது. எனினும் அவரை ஒப்படைக்குமாறு பேசாலை பொலிஸார் கோரினர். அதனால் அவர் அவர்களிடம் ஒப்படைக்கப்பட்டார் என்றும் யாழ்ப்பாணம் பொலிஸார் கூறினர்.

சந்தேக நபர் இன்று காலை சாவகச்சேரியில் உள்ள தேவாலயத்துக்குச் சென்றுள்ளார். அங்கு அருட்தந்தை ஒருவரின் பெயரைக் குறிப்பிட்டுத் தேடியுள்ளார்.

அதன்பின்னர் யாழ்ப்பாணம் பெரிய கோவிலுக்கு இன்று நண்பகல் வந்துள்ளார். அதன்போதே யாழ்ப்பாணம் பொலிஸாரால் கைது செய்யப்பட்டார்.
“அதிரடி” இணையத்துக்காக யாழில் இருந்து “கலைநிலா”

மன்னாரைச் சேர்ந்தவரே பெரிய கோவிலில் கைது!!! (வீடியோ, படங்கள்)

யாழ்ப்பாணம் மரியன்னை தேவாலய வளாகத்துக்குள் நடமாடிய ஒருவர் கைது!!

You might also like

Leave A Reply

Your email address will not be published.

4 × 4 =

*