;
Athirady Tamil News

வரி நிவாரணம் நீக்கப்பட்டதாக தெரிவிக்கப்படும் கூற்றில் உண்மை இல்லை!!

0

சிரேஷ்ட பிரஜைகளுக்கு வழங்கப்படும் வரி நிவாரணம் நீக்கப்பட்டிருப்பதாக கூறப்படும் கூற்று உண்மைக்கு புறம்பானது என உயர் கல்வி அமைச்சர் கலாநிதி பந்துல குணவர்தன குறிப்பிட்டுள்ளார்.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் ஊடகவியலாளர் ஒருவர் கேட்ட கேள்விக்கு அமைச்சர் பதிலளித்தார். இருப்பினும் கொவிட் 19 தொற்றில் இருந்து நாட்டை கட்டியெழுப்புவதற்காக கடன் வட்டி வீதத்தை தனி இலக்கத்தில் முன்னெடுப்பதற்கு கொள்கை ரீதியில் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டிருப்பதாகவும் அமைச்சர் கூறினார்.

தற்காலிக ரீதியில் இந்த நிலைமை முன்னெடுக்கப்பட்ட போதிலும் ஏனைய வரிகள் குறைக்கப்பட்ட போதிலும் இதன் பயன்கள் நீண்ட கால ரீதியில் பொது மக்களுக்கு தெளிவு படுத்தப்படும் என்றும் கூறினார்.

கொவிட் 19 தொற்றின் காரணமாக நட்டின் பொருளாதாரத்தை கட்டியெழுப்புவது தொடர்பிலும் அரச பொருளாதாரம் , முகாமைத்துவம் தொடர்பிலும் மற்றும் அதனுடன் தொடர்புபட்ட விசேட சபையுடன் பல்வேறு நடைமுறைகள் தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தப்பட்டிருப்பதாகவும் தெரிவித்த அமைச்சர் இதற்கு அமைவாக எதிர்வரும் வருடங்களில் நாட்டின் பொருளாதாரத்தை கட்டியெழுப்புவது தொடர்பாகவும் அரசாங்கம் கொள்கை ரீதியில் இந்த தீர்மானத்தை மேற்கொண்டிருப்பதாகவும் அவர் கூறினார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

13 + eight =

*