;
Athirady Tamil News

ஒஸ்ரியா’ நிறுவனத்தால் பெண் தலைமை குடும்பங்களுக்கு நிதியுதவி!! (படங்கள்)

0

வவுனியாவில் பெண் தலைமைத்துவ குடும்பங்களுக்கு ‘ஒஸ்ரியா’ போட்டோ நிறுவனத்தால் இன்று (07) நிதியுதவி வழங்கி வைக்கப்பட்டது.
ஒஸ்ரியா நிறுவனத்தின் உரிமையாளர் எஸ்.சிவஜீவனின் பணிப்புரைக்கமைவாக வவுனியாவில் பெண்களை தலைமைத்துவமாகக் கொண்ட 20 குடும்பங்களுக்கு நிதியுதவி வழங்கப்பட்டது.

உலகளாவிய ரீதியில் ஏற்பட்டிருக்கும் கொவைட் 19 பெருந்தொற்று காரணமாக பாதிக்கப்பட்ட குடும்பங்கள் கடந்த மே மாதம் ‘ஒஸ்ரியா’ நிறுவனத்தினால் இனங்காணப்பட்டு வவுனியா புகைப்பட சங்கத்தினூடாக நிவாரண உதவிகள் வழங்கப்பட்டிருந்தது.

அந்தவகையில், வவுனியா மாவட்டத்தில் கோவில்குளம், வேப்பங்குளம், மகாறம்பைக்குளம் மற்றும் திருநாவற்குளம் போன்ற கிராமங்களிலிருந்து தெரிவு செய்யப்பட்ட விசேட தேவைக்குட்பட்டோர் மற்றும் பெண் தலைமைத்துவத்தை சேர்ந்த குடும்பங்களுக்கு தலா ஐயாயிரம் ரூபா வீதம் ஒரு இலட்சம் ரூபா இன்று பகிர்ந்தளிக்கப்பட்டது.

இக்கொடுப்பனவை ‘ஒஸ்ரியா’ நிறுவனத்தின் முகாமையாளர் கந்தசாமி சசிதரன் பயனாளிகளுக்கு வழங்கி வைத்திருந்ததுடன் ஒஸ்ரியா நிறுவனமானது தொடர் மனிதாபிமானப்பணியில் ஈடுபட்டு வருவதுடன் அண்மையில் வவுனியாவில் குத்துச்சண்டை விளையாட்டு வீரர்களுக்கு ஒரு இலட்சம் ரூபா பெறுமதியான சீருடைகளையும் வழங்கி வைத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
“அதிரடி” இணையத்துக்காக வவுனியாவில் இருந்து “இதயசந்திரன்”

You might also like

Leave A Reply

Your email address will not be published.

eleven + 13 =

*