;
Athirady Tamil News

இதுவரை 2084 தேர்தல் முறைப்பாடுகள் பதிவு!!

0

இதுவரை 2084 தேர்தல் முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

அவற்றில் 1496 முறைப்பாடுகள் மாவட்ட தேர்தல் முறைப்பாட்டு முகாமைத்துவ மத்திய நிலையத்திற்கும் 588 முறைப்பாடுகள் தேசிய தேர்தல் முறைப்பாட்டு முகாமைத்துவ மத்திய நிலையத்திற்கும் கிடைத்துள்ளதாக அறிக்கை ஒன்றை வௌியிட்டு அந்த ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது.

மேலும், இதுவரை ஒரேயொரு வன்செயல் பதிவாகியுள்ளதாக தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

இதேவேளை, நேற்று (06) பிற்பகல் 04 மணியுடன் நிறைவடைந்த கடந்த 24 மணித்தியாலங்களில் 121 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக தேர்தல் ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

three + 1 =

*