;
Athirady Tamil News

வவுனியாவில் தரித்து நிற்கும் இரண்டு புகையிரதங்கள் !! (படங்கள்)

0

யாழ்ப்பாணத்திலிருந்து காலை 3.45 மணியளவில் கொழும்பு நோக்கி பயணத்தினை ஆரம்பித்த கடுகதி புகையிரம் இன்று (08.07.2020) அதிகாலை 5.50 மணியளவில் வவுனியாவின் எல்லைப்பகுதியினை அண்மித்த ஈரப்பெரியகுளம் பகுதியில் புகையிரதம் கடவையை விட்டு தடம் புரண்டதால் வடபகுதிக்கான ரயில் போக்குவரத்துக்கு தடை ஏற்பட்டுள்ளதுடன் பயணிகளுக்கு எவ்விதமான பாதிப்புக்களும் ஏற்படவில்லை

அதன் பின்னர் தடம் புரண்ட பெட்டிகளை ஈரப்பெரியகுளம் புகையிரத பாதையில் விட்டு விட்டு ஏனைய எஞ்சிய பெட்டிகளுடன் ஒரு மணிநேர தாமதத்தின் பின்னர் 6.55 மணியளவில் கடுகதி புகையிரதம் மீண்டும் கொழும்பை நோக்கிய தனது பயணத்தை மேற்கொண்டுள்ளது.

தடம் புரண்ட புகையிரத பெட்டிகளை அகற்றும் புகையிரத நிலைய திணைக்களத்தினர் ஈடுபட்டுள்ளமையினால் வடக்கிற்கான புகையிரத போக்குவரத்து பாதிப்படைந்துள்ளது.

இதன் காரணமாக யாழ்ப்பாணத்திலிருந்து காலை 5.30 மணிக்கும் மற்றும் யாழ்ப்பாணத்திலிருந்து காலை 6.20 மணிக்கு கொழும்பு நோக்கி பயணித்த ஆரம்பித்த புகையிரதங்கள் வவுனியா புகையிரத நிலையத்தில் இரண்டு மணிநேரமாக தரித்து நிற்கின்றன.

இதன் காரணமாக பயணிகள் வவுனியா புகையிரத நிலையத்தில் அமர்ந்து இருப்பதினை அவதானிக்க கூடியதாகவிருந்தது.

தடம் புரண்ட புகையிரத பெட்டிகளை அகற்றும் பணிகள் நிறைவடைய மதியம் இன்று 12.30 மணி வரை ஆகலாம் என வவுனியா புகையிரத நிலைய அதிகாரிகள் தெரிவித்தனர்.

“அதிரடி” இணையத்துக்காக வவுனியாவில் இருந்து “கோபி”


வட பகுதிக்கான புகையிரத போக்குவரத்தில் தடை!! (படங்கள்)

You might also like

Leave A Reply

Your email address will not be published.

twelve + 5 =

*