;
Athirady Tamil News

புதிய வேட்டாளர்களுக்கும் வாக்களிக்கவும் : சிவசேன அமைப்பு கோரிக்கை!!

0

இளைஞர்களுக்கும் புதிய வேட்டாளர்களுக்கும் வாக்களிக்கவும் : சிவசேன அமைப்பு கோரிக்கை

நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலில் புதிதாக வேட்பாளர்களுக்கும் இளைஞர்களுக்கும் பொதுமக்கள் வாக்களிக்குமாறு வவுனியா ஊடக அமையத்தில் இன்று (08.07.2020) காலை 9.00 மணியளவில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் சிவசேன அமைப்பின் வன்னி பிராந்திய இணைப்பாளர் அ.மாதவன் தெரிவித்தார்.

தொடர்ந்து அவர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில்,

நடைபெறவிருக்கின்ற பாராளுமன்ற பொது தேர்தலில் பொதுமக்கள் உங்களது வாக்குக்களை புதிதாக புதிதாக வேட்பாளர்களாக இருக்கின்றவர்களுக்கும் இளைஞர்களுக்கும் எதிர்காலத்தின் நலனை கருத்தில் கொண்டு தாங்கள் வாக்களிக்க வேண்டும் . வாக்குகளை நாங்கள் கட்டாயமாக அளிக்க வேண்டியவர்களாக காணப்படுகின்றோம்.

தேர்தல் காலங்களில் எங்கள் வாக்குகள் மிகவும் முக்கியமானது இந்த தேர்தலில் மாற்றத்தினை எதிர்நோக்கும் கருத்தோடு வாக்களித்தால் மிகச்சிறப்பாகவிருக்கும் அத்துடன் எமது நோக்கமானது ஓர் மாற்றத்தினை அதாவது நாட்டில் இருக்கக்கூடிய சமூகத்தில் இருக்கக்கூடிய ஓர் மாற்றத்தினை எதிர்நோக்கி வாக்காளர் வாக்களிக்க கூடியதாகவிருந்தால் சிறப்பாகவிருக்கும்

இன்றைய நிலமையில் காணாமல் ஆக்கப்பட்டவர்கள் , கணவரை இழந்தவர்கள் போராட்டத்திலும் ஈடுபட்டுள்ளனர். அவர்களுடைய பிரச்சனைகளுக்கு தீர்வினை பெற்றுக்கொடுப்பவர்களுக்கும் சமூகத்தின் பொருளாதாரத்தினை கட்டியேழுப்புவர்களுக்கும் மக்கள் வாக்களிக்க வேண்டும் .

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு நீண்டகாலத்தினை நாங்கள் வழங்கியிருக்கின்றோம் ஆனால் தீர்வுத்திட்டமானது சரியான முறையில் கிடைக்கப்பெறவில்லை ஆகவே மாற்றத்தினை ஏற்படுத்தும் நோக்கில் செயற்பட்டால் நிச்சயமாக ஓர் தீர்வுத்திட்டத்தினை பெற்றுக்கொள்ளமுடியும் என தெரிவித்தார்.

“அதிரடி” இணையத்துக்காக வவுனியாவில் இருந்து “கோபி”

You might also like

Leave A Reply

Your email address will not be published.

15 − two =

*