;
Athirady Tamil News

யாழ் மாவட்ட போலீசாருக்கும், மாவட்ட செயலக அதிகாரிகளுக்கும் இடையிலான சந்திப்பு!! (வீடியோ)

0

எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலை சுயாதீனமாக நடத்துவது தொடர்பில் யாழ்மாவட்ட போலீசாருக்கும் யாழ் மாவட்ட செயலக அதிகாரிகளுக்கும் இடையிலான சந்திப்பு யாழ் மாவட்ட தெரிவத்தாட்சி அலுவலர் க. மகேசன் தலைமையில் யாழ்ப்பாண மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது

குறித்த கூட்டத்தில் பின் கருத்து தெரிவித்த யாழ் மாவட்ட அரசாங்க அதிபர்

எதிர்வரும் பாராளுமன்ற பொதுத் தேர்தலை முன்னிட்டு மாவட்ட செயலகத்தில் பல்வேறுபட்ட கலந்துரையாடல்களை மேற்கொண்டு வருகின்றோம் அதன டிப்படையில் இன்றைய தினம் யாழ்மாவட்ட போலீசாருடன் ஒரு சந்திப்பினை மேற்கொண்டிருந்தோம்

இச்சந்திப்பின்போது யாழ்ப்பாண மாவட்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் மற்றும் யாழ்ப்பாணம் காங்கேசந் துறை சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் கள் மற்றும் உதவி பொலிஸ் அத்தியட்சர்கள் யாழ்ப்பாண பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஆகியோர் கலந்து கொண்டார்கள்

எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலை முன்னிட்டு போலீசாரும் யாழ் தேர்தல் திணைக்களமும் இணைந்து பல்வேறுபட்ட வேலைத்திட்டங்களை முன்னெடுத்து வருகின்றோம் அந்த வகையில் எவ்வாறு இந்த வேலைகள் ஒழுங்கு படுத்தப்பட வேண்டும் அதற்குரிய ஏற்பாடுகளை செய்ய வேண்டும் மற்றும் சட்டம் ஒழுங்கை அவர்கள் எவ்வாறு இந்த சந்தர்ப்பத்தில் நிலைநாட்ட முடியும்போன்ற பல்வேறு விடயங்கள் தொடர்பில் இன்றைய தினம் ஆராய்ந்தோம்

அதனடிப்படையில் நாங்கள் முன்கூட்டியே திட்டமிட்டு இந்த பாராளுமன்ற தேர்தலில் நாங்கள் இரண்டு தரப்பினரும் எவ்வாறு செயல்படுதல் தொடர்பில் ஆராய்ந்திருந்தோம் வாக்களிப்பு நிலையத்தின்பாதுகாப்பு அதேபோன்று வாக்கு கணக்கிடும் நிலையத்திற்கு பாதுகாப்பு அதேபோன்று போக்குவரத்து நடைமுறைகள் போன்ற பல்வேறு விடயங்கள் குறிப்பாக பாதுகாப்பு விடயங்கள் தொடர்பிலும் ஆராயப்பட்டது

தேர்தல் விதிமுறைமீறல்கள் தொடர்பில்போலீஸ் தரப்பில் எடுக்கப்பட வேண்டிய விடயங்கள் தொடர்பில் இன்றைய தினம் முக்கியமாக ஆராய்ந்தோம் அதன் அடிப்படையிலே பொலிஸ் தரப்பினர் வடக்கு மாகாண சிரேஸ்ட பொலிஸ் மா அதிபரின் பணிப்புரைக்கு இணங்க மாவட்ட செயலகத்துடன் இணைந்து தேர்தலு செயற்பாடுகளை முன்னெடுப்பதாகவும் போலீசாரால் தெரிவிக்கப்பட்டது என்றார்

குறித்த கூட்டத்தில் கருத்து தெரிவித்த யாழ்ப்பாண பிரதி பொலிஸ் மாஅதிபர் எதிர்வரும் பாராளுமன்றதேர்தலை சுயாதீனமாகவும் நியாயமாகவும் நடத்துவதற்கு தேர்தல் திணைக்களத்துடன் இணைந்து போலீசார் செயற்படுவதற்கு தயாராக இருக்கின்றோம் அதாவது மாவட்ட உதவி தேர்தல் அலுவலகத்தால்வழங்கப்படுகின்ற பணிப்புரைக்கமைய எமது செயற்பாடுகளை முன்னெடுப்பதற்காக மாவட்ட போலீசாருக்கு என்னால் அறிவுறுத்தப்பட்டுள்ளது அதேபோல் நாங்கள் தற்பொழுது சட்டவிரோதமாக ஒட்டப்பட்டுள்ள சுவரொட்டிகள் மற்றும் தேர்தல்விளம்பர பதாதைகள் அகற்றல் மற்றும் தேர்தல் வன்முறையோடு சம்பந்தப்பட்ட விடயங்கள் தொடர்பில் நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றோம் அதற்கென நியமிக்கப்பட்ட போலீஸ் அணியினால்,

அது தொடர்ச்சியாக முன்னெடுக்கப்படும் அதேபோல் பொலிஸ் தலைமையகத்தினாலும் சில அறிவுறுத்தல்கள் எமக்கு வழங்கப்பட உள்ளன எனினும் எதிர்வரும் தேர்தலில் சுயாதீனமாகவும் நியாயமானதாகவும் நடத்துவதற்கு யாழ்ப்பாண மாவட்ட செயலகத்தோடுபோலீசார் முழு ஒத்துழைப்பையும் வழங்கத் தயாராக உள்ளோம் இந்த விடயம் தொடர்பில் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் மற்றும் அரசியல் கட்சியினை சார்ந்தவர்களுக்கும் மாவட்ட செயலகத்தினால் பல அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளன எனவே குறித்த தேர்தலை நடத்துவதற்கு அனைவரின் ஒத்துழைப்பும் அவசியம் எனவும் அவர் தெரிவித்தார்.
“அதிரடி” இணையத்துக்காக யாழில் இருந்து “கலைநிலா”

யாழில் இன்று காலை இடம்பெற்ற பயங்கரம்!!!

You might also like

Leave A Reply

Your email address will not be published.

fourteen − 13 =

*