;
Athirady Tamil News

கிளிநொச்சி வைத்தியசாலையில் போதிய வசதிகள் இன்மை – சி.சசிதரன்!!

0

போதிய வசதிகள் இல்லாமையால் கிளிநொச்சி வைத்தியசாலையிலிருந்து வெளி மாவட்டங்களிற்கு நோயாளர்களை அனுப்ப வேண்டிய நிலை காணப்படுகின்றது என என்பு முறிவு, நெரிவு சத்திரசிகிச்சை நிபுனர் வைத்தியர் சி.சசிதரன் தெரிவித்துள்ளார். கிளிநொச்சியில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போது ஊடகவியலாளர்களால் எழுப்பப்பட்ட கேள்விக்கு பதில் அளிக்கும்போதே அவர் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில்,

கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலையில் என்பு முறிவு சிக்கை பிரிவு ஆரம்பிக்கப்பட்டு சிகிச்சைகள் வழங்கப்பட்டு வருகின்றன. இருந்தபோதும் வைத்தியாலையில் ஸ்கானர் வசதி இன்மையால் மாதாந்தம் 30 பேர்வரையில் யாழ் போதனா வைத்தியசாலைக்கு இங்கிருந்து அனுப்பி வைக்கப்படுகின்றனர்இ இதனால் அந்த வைத்ிதசாலையிலும் நோயாளர்கள் அதிகரித்து நெருக்கடிகள் ஏற்படுகின்றன.

குறிப்பாக இந்த வீதி விபத்துக்களால் ஏற்படுகின்ற காயங்கள் மற்றும் முறிவுகளிற்குள்ளாகும் அதிகளவானோர் அனுமதிக்கப்புடுகின்றார்கள். அதனால் வைத்திசாலையில்போதிய வசதிகளும் காணப்பட்டால் மக்களிற்கான சேவையை முழுமையாக பெற்றுக்கொடுக்க முடியும் எனவும் அவர் குறிப்பிட்டா்ர.

கிளிநொச்சி வைத்தியசாலைக்கான விபத்து பிரிவு இல்லாமையால் சிரமங்கள் காணப்படுகின்றது. எனினும் வைத்தியசாலையில் உள்ள வசதிகளைக்கொண்ட விபத்துக்களால் அனுமதிக்கப்படுகின்ற நோயாளர்களிற்கான சிகிச்சைகளை வழங்கி வருகின்றோம். விபத்த பிரிவு ஒன்று உருவாக்கப்பட்டு வளங்கள் பெற்று தரப்படும் சந்தர்ப்பத்தில் கிளிநொச்சி மாவட்ட வைத்திய சாலையில் நிறைவான சேவையை முன்னெடுக்க முடியும் எனவும் அவர் நம்பிக்கை வெளியிட்டிருந்தார்.
“அதிரடி” இணையத்துக்காக வன்னியில் இருந்து “வன்னியூரான்”

You might also like

Leave A Reply

Your email address will not be published.

7 + 10 =

*