;
Athirady Tamil News

வெலிகட சிறைக்கைதியுடன் தொடர்பில் இருந்த 315 பேரின் PCR பரிசோதனை முடிவுகள்!!

0

வெலிகட சிறைச்சாலையில் இருந்து பி.சீ.ஆர் பரிசோதனைகளுக்கு உட்படுத்தப்பட்ட 315 பேருக்கும் கொரோனா தொற்று இல்லை என இராணுவத் தளபதி ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

நேற்றைய தினம் வெலிகட சிறைச்சாலையில் இருந்த கைது ஒருவர் கொரோனா தொற்றுக்கு உள்ளானதை அடுத்து அவருடன் தொடர்பில் இருந்த அனைவரும் பி.சீ.ஆர் பரிசோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டிருந்தனர்.

அதனடிப்படையில் அவருடன் தொடர்பில் இருந்ததாக கூறப்படும் 315 பேரும் பி.சீ.ஆர் பரிசோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டிருந்தததை அடுத்து அவர்கள் எவரும் கொரோனா தொற்றுக்கு உள்ளாகிவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

4 × three =

*