;
Athirady Tamil News

எம் இனத்தின் இருப்பு கேள்விக்கு உட்ப்படுத்தப்படுகிறது – சி.சிறீதரன்!! (படங்கள்)

0

எம் இனத்தின் இருப்பு கேள்விக்கு உட்ப்படுத்தப்படுகிறது எனத் தமிழ்தேசியக்கூட்டமைப்பின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் யாழ் மாவட்ட வேட்பாளருமான சிவஞானம் சிறீதரன் அவர்கள் தெரிவித்துள்ளார்.

நேற்று கிளிநொச்சி செல்வாநகர் பிரதேசத்தில் மாலை 6.30 மணியளவில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கருத்து தெரிவிக்கும் போதே அவர் அவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்

எம் இனத்தின் வாழ்க்கை என்பது அழிக்கப்பட்டுக்கொண்டு செல்கிறது எங்களை நோக்கி புத்த கோவில்கள் வருகிறது எங்கள் இடங்கள் இராணுவ முகாம்களாக மாற்றப்பட்டுக்கொண்டு உள்ளது காலையில் இருந்து மாலை வரை எத்தனையோ காவலரண்களை பார்கின்றோம் நாளாந்தம் புதிய புதிய காவலரண்கள் வருகிறது இந்த சூழ்நிலைகள் எல்லாம் எங்களைப் பொறுத்த வரை ஒரு ஆபத்தான சூழ்நிலைக்குள் போய்கொண்டிருக்கின்றோம் முழுமையாக ஒரு இராணுவ மயப்படுத்தப்பட்ட இராணூவ பிரசன்னத்திற்குள் வாழுகின்ற சூழலுல் எங்களை நோக்கி நகர்ந்துகொண்டுள்ளது இந்த சூழலில் தான் எங்கள் பணிகளை நாங்கள் முன்னெடுத்து வருகின்றோம்

இப்போது தமிழர்கள் அனைவரும் தமிழ்த்தேசியக் கூட்டமைப்போடு

ஒன்றாக பயணிக்க வேண்டிய நேரம் அவ்வாறு ஒன்றாக பயணித்தால் வடக்கு கிழக்கில் இந்த பாராளுமன்ற தேர்தலில் இருபது ஆசனங்களை நாம் பெற முடியும் 225 பாராளுமன்ற உறுப்பினர்களில் 20 உறுப்பினர்கள் இருந்தால் மட்டுமே நாம் எதிர்வரும் காலங்களில் இந்த மண்ணில் ஏதாவது பேசக்கூடிய அறுத்துறுத்து சொல்லக் கூடிய அல்லது எங்கள் உரிமைக்காக உரத்துக் குரல் கொடுக்கக்கூடிய வல்லமை எங்களுக்கு கிடைக்கும் இல்லை என்றால் யாரோ அபிவிருத்தி என்கின்ற மாய வலையை விரித்து வாக்குக் கேட்ப்பவர்களுக்கும்,அரச முகவர்களுக்கும்,ஒட்டுக்குழுக்கழுக்கும் வாக்களித்துக் கொண்டிருக்க போகின்றோம்

நாங்களாக எங்கள் மண்ணில் இறந்துபோன இறமைகளை மீட்டு எடுத்து நிமிர்ந்து வாழப்போகின்றோம் என்கின்ற சூழல் எங்களுக்கு எப்போது வரப் போகிறது நான் கூட இரண்டு தடவைகள் பாராளுமன்ற உறுப்பினராக இருந்திருக்கின்றேன் என்னால் முடிந்த பணிகளை இந்த மண்ணிற்கு ஆற்றியிருக்கிறேன் எங்கள் உரிமைகள் பற்றி பேசாமல் அல்லது எங்கள் உரிமைகளை விற்றுவிட்டு நாங்கள் அபிவிருத்தி பற்றிபேசவில்லை அனைவரும் சிந்திக்க வேண்டிய தருணம் பல்வேறுபட்டவர்கள் பல்வேறுபட்ட எண்ணங்களைக் கொண்டிருக்கிறார்கள் காலமும் வரலாறுமே அதனை தீர்மானிக்க வேண்டும் எங்களை பொறுத்தவரை பல்வேறு சிதைவுகளும் பல்வேறு வீச்சு எல்லைகளும் காணப்பட்டாலும் அவற்றை எல்லாம் கடந்து பயணிக்கின்றோம் என்றால் அது உங்களுடைய பலம் மீண்டும் உங்கள் பேராதரவினை நாடி நிற்கின்றோம் என மேலும் தெரிவித்தார்

குறித்த சந்திப்பில் கரைச்சி பிரதேசசபையின் தவிசாளர் வேழமாலிதன் கட்சியின் மத்தியகுழு உறுப்பினர் ஜெக்குமார் கரைச்சி பிரதேசசபையின் வட்டார உறுப்பினர் கட்சியின் வட்டார அமைப்பாளர்கள் மக்கள் எனப்பலரும்கலந்து கொண்டனர்.
“அதிரடி” இணையத்துக்காக வன்னியில் இருந்து “வன்னியூரான்”

You might also like

Leave A Reply

Your email address will not be published.

1 × five =

*