;
Athirady Tamil News

வெற்றியின் பின்னர் பொருளாதாரத்தை கட்டியெழுப்ப சஜித்தின் திட்டங்கள்!!

0

பொதுத் தேர்தலில் மக்கள் தேசிய சக்தியின் வெற்றியை தொடர்ந்து இந்நாட்டின் பொருளாதாரத்தை மீள உயிர்பிக்கும் நடவடிக்கையை மூன்று கட்டத்தின் கீழ் மேற்கொள்வதாக கட்சியின் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

நிகவரட்டிய பகுதியில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

சீர்குலைந்துள்ள பொருளதாரத்தை கட்டியெழுப்புவதற்காக மக்களின் கைகளிற்கு பணத்தை வழங்க வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.

முதற்கட்டமாக சிறிய மற்றும் நடுத்தர வர்க்கத்தை சேர்ந்த அன்றாட சம்பளம் பெரும் குடும்பங்களுக்கு மாதந்தம் 20,000 ரூபா வீதம் வழங்குதாக அவர் தெரிவித்துள்ளார்.

அது மட்டுமின்றி வெற்றியின் பின்னர் 24 மணித்தியாலங்களுக்குள் நிச்சயமாக எரிபொருள் விலையை குறைப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

one + thirteen =

*