;
Athirady Tamil News

வவுனியாவில் பரிதவித்த யானைக்குட்டி மீட்பு!! (படங்கள்)

0

வவுனியா பூவரசன்குளம் பகுதியில் தாயை இழந்து தனிமையிலிருந்த யானைக்குட்டி ஒன்று நேற்று இரவு மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர் .

இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்,

வவுனியா பூவரசன்குளம் வேலன்குளம் பகுதியில் மூன்று மாதம் நிரம்பிய யானைக்குட்டி ஒன்று நேற்று மாலை தனிமையில் இருப்பதை கண்ட சிலர் பூவரசங்குளம் பொலிஸாருக்கும் வனஜீவராசிகள் திணைக்களத்துக்கும் தகவல் வழங்கியுள்ளனர் .

குறித்த பகுதிக்கு விரைந்த வனஜீவராசிகள் திணைக்கள உத்தியோகத்தர்கள் யானைக்குட்டியை மீட்டுள்ளதுடன் மருத்துவ பரிசோதனைகளின் பின்னர் கிரித்தலை யானைகள் சரணாலயத்திற்கு கொண்டு செல்லவுள்ளதற்கான நடவடிக்கையினை மேற்கொண்டுள்ளனர்.

“அதிரடி” இணையத்துக்காக வவுனியாவில் இருந்து “கோபி”

You might also like

Leave A Reply

Your email address will not be published.

7 + eighteen =

*