;
Athirady Tamil News

எனது உடலமைப்பை கேலி செய்கிறார்.. வனிதா மன்னிப்பு கேட்டே ஆக வேண்டும்.. பிரபல தயாரிப்பாளர் அதிரடி! (வீடியோ, படங்கள்)

0

சென்னை: நடிகை வனிதா தன்னுடைய உடலமைப் வைத்து பாடி ஷேமிங் செய்ததாக பிரபல தயாரிப்பாளர் குற்றம்சாட்டியுள்ளார்.

நடிகை வனிதா விஜயக்குமார் கடந்த 27 ஆம் தேதி பீட்டர் பால் என்பவரை மூன்றாவதாக காதல் திருமணம் செய்துக் கொண்டார். இதனை அறிந்த அவரது முதல் மனைவி எலிசபெத் ஹெலன், தன்னை விவாகரத்து செய்யாமல் பீட்டர் பால் இரண்டாவது திருமணம் செய்துக்கொண்டதாக போலீஸில் புகார் அளித்தார்.

பிரபலங்கள் கருத்து

இதனால் வனிதாவின் மூன்றாவது திருமணம் பெரும் பேசு பொருளானது. பீட்டர் பாலுடனான வனிதாவின் மூன்றாவது திருமணத்தை சமூக வலைதளங்களில் பலரும் விமர்சித்தனர். நடிகைகள் லக்ஷ்மி ராமகிருஷ்ணன், குட்டி பத்மினி உள்ளிட்டோரும் வனிதாவின் மூன்றாவது திருமணம் குறித்து கருத்து தெரிவித்தனர்.

தயாரிப்பாளர் ரவீந்திரன்

தன்னுடைய திருமணம் பற்றி பேசிய அனைவரையும் விளாசி தள்ளினார் வனிதா. அந்த வகையில் பிரபல தயாரிப்பாளரான ரவீந்திரன் சந்திரசேகர், பீட்டர் பாலின் முதல் மனைவிக்கு ஆதரவாக பேசினார். வனிதா சட்டப்படி திருமணம் செய்யவில்லை

மிரட்டிய வனிதா

இதனால் பீட்டர் பாலின் முதல் மனைவிக்கு ஆதரவாக தான் நிற்கபோவதாக கூறினார். இதனால் ஆத்திரமடைந்த வனிதா, தயாரிப்பாளர் ரவீந்திரனை கடுமையாக சாடினார். அதோடு தனது தனிப்பட்ட விஷயம் குறித்து பேசிய ரவீந்திரன் மன்னிப்பு கேட்க வேண்டும், இல்லையெனில் வழக்கு தொடரப்படும் என போனில் மிரட்டினார்.

பாடி ஷேமிங்

அந்த ஆடியோக்கள் எல்லாம் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் நடிகை வனிதா தனது உடலமைப்பை வைத்து தன்னை கேலி செய்ததாக கூறியுள்ளார் ரவீந்திரன். தன்னிடம் போனில் பேசியபோது தனது உடல் அமைப்பு குறித்து கேலி செய்தார் என்று கூறியுள்ளார் ரவீந்திரன்.

மன்னிப்பு கேட்க வேண்டும்

இதற்காக வனிதா தன்னிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று கூறியுள்ளார். தான் வனிதாவிடம் மன்னிப்பு கேட்க முடியாது என்று கூறியுள்ள ரவீந்திரன், ஹெலனுக்கு ஆதரவாக நிற்கபோவதாகவும், வனிதா சட்டப்படி எடுக்கும் நடவடிக்கையை எதிர்கொள்ள தயார் என்றும் தயாரிப்பாளர் ரவீந்திரன் கூறியுள்ளார்.

ஒன்னும் செய்ய முடியாது

இதனிடையே தனது பதிவு திருமணத்திற்கான மோதிரங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஷேர் செய்த வனிதா, எங்களின் காதல் எப்போதும் குறையாது. எங்களின் கடைசி மூச்சு வரை இந்த காதல் தொடரும். சட்டமோ அல்லது டிராமா ட்ரூப்போ ஒன்னும் செய்ய முடியாது என தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.






லைவில் கணவரை அழைத்து மீண்டும் லிப்லாக் கொடுத்த வனிதா அக்கா.. நைஸ் மேன் என புகழாரம்! (வீடியோ, படங்கள்)

யாரும் அதைப்பத்தி பேசாம இருந்தாலே போதும்.. வனிதாவுக்காக வரிந்துக்கட்டிய பிக்பாஸ் பிரபலம்! (படங்கள்)

நான்வெஜ் கூட சாப்ட மாட்டாருன்னு சொன்னீங்க.. வசமா சிக்கிய வனிதா அக்கா.. வச்சு செய்யும் நெட்டிசன்ஸ்!! (வீடியோ, படங்கள்)

என் அப்பா விபச்சாரத்துக்கும் குடிக்கும் அதிகம் செலவு செய்வார்.. வனிதாவின் 3வது கணவர் மகன் திடுக்! (வீடியோ, படங்கள்)

நீங்க என்ன ஜட்ஜா?கோர்ட்டா? ஏழரை வருஷமா கண்டுக்கல இப்போ எதுக்கு வர்றாங்க.. வெளுத்து வாங்கிய வனிதா! (வீடியோ, படங்கள்)

அந்தக் கடவுளுக்கே ரெண்டு பொண்டாட்டி.. இதெல்லாம் கல்ச்சரா.. அதகளம் செய்யும் வனிதா! (வீடியோ, படங்கள்)

முறையாக விவாகரத்து அளிக்கவில்லை.. முதல் மனைவி புகார்.. வனிதாவின் மூன்றாவது கணவருக்கு சிக்கல்!! (வீடியோ, படங்கள்)

கிறிஸ்தவ முறைப்படி பீட்டர் பாலை கரம்பிடித்தார் வனிதா.. லிப்லாக்குடன் களைக்கட்டிய திருமணம்! (வீடியோ, படங்கள்)

பிக்பாஸ்தான் முக்கியம்.. மகளை ஒப்படைக்க சம்மதம்.. 3 மணி நேரத்துக்குப்பின் முடிவு எடுத்த வனிதா..!! (படங்கள் & வீடியோ)

பிக்பாஸ் வீட்டில் உள்ள வனிதா எந்த நேரமும் கைது செய்யப்பட வாய்ப்பு.. தெலுங்கானா போலீஸ் அதிரடி..!!

சினிமா, சீரியலில்தான் அவர் நல்லவர்.. நிஜத்தில் என்ன செய்தார் தெரியுமா.. விஜயகுமாரை விளாசிய வனிதா..!! (வீடியோ)

You might also like

Leave A Reply

Your email address will not be published.

five × four =

*