;
Athirady Tamil News

கேப்பாப்புலவில் பயங்கரம் – தந்தையால் 5 வயது மகளுக்கு நேர்ந்த கொடூரம்!!

0

முல்லைத்தீவு முள்ளியவளை பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட கேப்பாபுலவு பகுதியில் குடும்பத் தகராற்றில் தந்தையால் வெட்டப்பட்ட சிறுமியொருவர் முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

குறித்த சம்பவம் கடந்த 8 ஆம் திகதி இடம்பெற்றுள்ள நிலையில், 5 வயதுடைய சிறுமியொருவரே இவ்வாறு படுகாயமடைந்துள்ளார்.

இச்சம்பவத்தினை தொடர்ந்து பாதிக்கப்பட்ட சிறுமியின் தந்தையான 28 வயதுடைய நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பில் முள்ளியவளை பொலிசார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றார்கள்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

2 × five =

*