;
Athirady Tamil News

ராணுவ வீரர்கள் சென்ற வாகனத்தை குறிவைத்து கண்ணிவெடி தாக்குதல் – 8 பேர் பலி..!!

0

வடக்கு-மத்திய ஆப்பிரிக்காவில் சாட் குடியரசு என்ற நாடு உள்ளது. இந்நாட்டை சுற்றி லிபியா, சூடான் மற்றும் நைஜீரியா ஆகிய நாடுகள் அமைந்துள்ளது.

இங்கு போகோ ஹாரம், ஐஎஸ் போன்ற பயங்கரவாத அமைப்புகள் செயல்பட்டு வருகிறது. இந்த பயங்கரவாதிகளை ஒடுக்கும் நடவடிக்கையில் பாதுகாப்பு படையினர் ஈடுபட்டு வருகின்றனர்.

இதனால் பாதுகாப்பு படையினருக்கும் பயங்கரவாத குழுக்களுக்கும் இடையே அவ்வப்போது மோதல் சம்பவங்கள் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், நைஜீரியாவின் எல்லையோரம் அமைந்துள்ள சாட் நாட்டின் லேக் மாகாணத்தில் நேற்று அந்நாட்டு ராணுவத்தினர் ரோந்து பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்தனர்.

கலாம் என்ற பகுதியில் ராணுவ வாகனம் சென்றபோது போகோ ஹாரம் பயங்கரவாதிகளால் சாலையின் அருகே புதைத்து வைக்கப்பட்டிருந்த கண்ணிவெடிகள் திடீரென வெடித்தது. இந்த கண்ணிவெடி தாக்குதலில் ராணுவ வீரர்கள் சென்ற வாகனம் வெடித்து சிதறியது.

இந்த தாக்குதலில் 8 ராணுவ வீரர்கள் உயிரிழந்தனர். மேலும், 11 வீரர்கள் படுகாயமடைந்தனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

seventeen − 16 =

*