;
Athirady Tamil News

இந்துகோவில்களை பாதுகாக்க மோடி தலையிடுங்கள்!! காணாமல் போனோரின் உறவுகள்!! (படங்கள்)

0

இந்துக்கோவில்களையும், தமிழர்களையும் காப்பாற்ற இந்திய பிரதமர் மோடி உடனடியாக தலையிட வேண்டும். என்று வவுனியாவில் தொடர்போராட்டம் மேற்கொள்ளும்காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் தெரிவித்தனர்.

அவர்கள் போராட்டம் மேற்கோள்ளும் இடத்தில் இன்றயதினம் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர்கள் இவ்வாறு தெரிவித்தனர்.

தொடர்ந்துகருத்து தெரிவித்த அவர்கள்…….

பௌத்த அடிப்படை வாதமே காணாமல் ஆக்கப்பட்டதற்கும்,அவர்களை கண்டு பிடிப்பதற்கும் தடையாக உள்ளது. இந்து கோவில்கள் சிங்கள பௌத்த மத பிக்குகளால் நீண்ட காலமாக ஆக்கிரமிக்கப்பட்டு வருகின்றது.சமீபத்தில், வரலாற்று கோயில்கள் புத்த மதத்திற்கு சொந்தமானவை என தெரிவித்த
தேரர்களின் கருத்து எம்மை எல்லாம் அச்சமடையசெய்துள்ளது ,

திருக்கோணேச்சரம் கோவில். இலங்கையில் உள்ள இரண்டு தேவாரப் பாடல் பெற்ற தலங்களுள் ஒன்று. கிபி 7 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த திருஞானசம்பந்தர் இக்கோயிலின் மீது ஒரு பதிகம் பாடியது குறிப்பிடத்தக்கது.

இப்போது சிங்கள பௌத்த பிக்குகள் கிழக்கு மாகாணத்திதில் 25 கோயில்கள் புத்த மதத்தைச் சேர்ந்தவை என்று தெரிவித்து புத்த கோவிலைக் கட்டுவதற்கு முயற்சிப்பதாக இந்துக்கள் பயப்பிடுகிறார்கள்.புதிய சிங்கள அரசாங்கம் ஒரு குழுவை உருவாக்கி, கிழக்கு மாகாண தொல்பொருள் பாரம்பரியத்தை பாதுகாத்தல் என்று கூறி, இந்து கோவில்களை கைப்பற்ற முயற்றி செய்வதுடன் நிலங்களைத் தோண்டி, அதனுள் சில பழைய புத்த சின்னங்களை வைக்கின்றன.

பின்னர்தங்களின் வரலாற்று பௌத்த இடம் என்று கூறி , இலங்கை இராணுவத்தை அனுப்புவதன் மூலம் அந்த இடங்களை பாதுகாக்கிறார்கள், இறுதியில் ஒரு புத்த கோவிலை கட்டி சிங்கள மக்களை குடி ஏற்றுகிறார்கள்.
இதை நாம் இனப்படுகொலை என்று அழைக்கிறோம்.

இந்தியாவின் அண்டை நாடான இலங்கையில் இந்து மதத்தைப் பாதுகாப்பது பிரதமர் மோடியின் கடமையாகும்.இந்திய காங்கிரஸ் கட்சி எந்தவொரு அரசியல் தீர்வும் இல்லாமல் தமிழர்களை பலவீனப்படுத்தி, 2009 ல் நமது பாதுகாவலர்களை அழிக்க ஒரு பச்சை விளக்கு காட்டியது.மோடி இலங்கைக்கு வந்த போது கூட்டுறவு மற்றும் கூட்டாட்சிக்கு உறுதியளித்ததுடன் அதனை பரிந்துரைத்திருந்தார். அதை அமுல்படுத்துவதற்கு முன்னர் அது தொடர்பாக விளக்கமளிக்க இந்திய அரசியலமைப்பு அறிஞர்களின் ஆரம்ப குழுவை அனுப்புவதற்கு எதுவும் செய்யப்படவில்லை. நாம் அதனை மிக விரைவில் செய்யும் படி கேக்கிறோம்.

இந்தியாவால் திணிக்கப்பட்ட அரசமைப்பின் 13 ஆவது திருத்தச் சட்டத்தைஏற்கமுடியாது. அது இல்லாதொழிக்கப்பட வேண்டும் என்று ராவண பலய அமைப்பின் பொதுச்செயலர் சத்தாதிஸ்ஸ தேரர் வலியுறுத்தியுள்ளார் இது இந்தியாவின் வல்லமையை இழிவு படுத்துவதாகும்.

இலங்கையின் வடகிழக்கில் உள்ள பண்டைய இந்து நாகரிகத்தையும், கோவில்களையும் பாதுகாப்பது இந்து நாடு என்ற வகையில் இந்தியாவின் கடமையாகும்.இது இந்தியாவினால் செய்ய முடியும்.1987 இல் இந்தியா இங்கு வந்து 13ம்திருத்த சட்டத்தின் மூலம் வட கிழக்கை இணைத்து இது ஒரு தமிழர் தேசம் என்று அங்கிகரித்தமை குறிப்பிடத்தக்கது.

சுமந்திரன் புத்த மதத்திற்கு முதன்மையான இடத்தை கொடுத்ததும், இலங்கை ஒரு பௌத்த நாடுஎன்று இந்தியாவில் வைத்து சம்பந்தன் கூறியமையே இவை யாவற்றுக்கும் காரணம்.என்றனர்.
“அதிரடி” இணையத்துக்காக வவுனியாவில் இருந்து “இதயசந்திரன்”

You might also like

Leave A Reply

Your email address will not be published.

two + 10 =

*