;
Athirady Tamil News

வவுனியாவில் உதவித் திட்டங்கள் வழங்கி வைக்கப்பட்டது.!! (படங்கள்)

0

வவுனியாவில் மக்களுக்கான உதவித் திட்டங்கள் இன்று (11) வழங்கி வைக்கப்பட்டது.

வவுனியா திருநாவற்குளத்தில் அமரர் கந்தையா தர்மலிங்கம் அவர்களின் ஆறாம் ஆண்டு நினைவை முன்னிட்டு தர்மலிங்கம் நாகராஜா அவர்களினால் இன்றையதினம் சமூக நலத் திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டது.

அந்த வகையில் கௌரவ நகர் சபை உறுப்பினர் சுந்தரலிங்கம் காண்டீபன் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் திருநாவற்குளம் மாணிக்கதாசன், வசந்தன் மைதானத்தை சேர்ந்த, யங் லைன் விளையாட்டுக் கழகத்திற்கு 42 வர்ண சீருடைகள், 67 மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்கள், 50 வறுமைக் கோட்டிற்குட்பட்ட குடும்பங்களுக்கான உலர் உணவு நிவாரண பொருட்கள் என்பன வழங்கி வைக்கப்பட்டது.

இந் நிகழ்வில் முன்னாள் விவசாய அமைச்சர் கந்தையா சிவநேசன், வவுனியா நகரசபை உறுப்பினர் க.சந்திரகுலசிங்கம் (மோகன்) மற்றும் தமிழீழ மக்கள் விடுதலை கழகத்தின் (PLOTE) உறுப்பினர்கள், ஆதரவாளர்கள், பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

“அதிரடி” இணையத்துக்காக வவுனியாவில் இருந்து “இதயசந்திரன்”

You might also like

Leave A Reply

Your email address will not be published.

16 + 1 =

*