யாழ். குடாநாட்டின் பல பகுதிகளிலும் நாளை ஞாயிற்றுக்கிழமை(12) மின்சாரம் தடை!!

மின்சாரத் தொகுதிப் பராமரிப்பு, புனரமைப்பு மற்றும் கட்டுமானப் பணிகளுக்காக யாழ். குடாநாட்டின் பல பகுதிகளிலும் நாளை ஞாயிற்றுக்கிழமை(12) மின்சாரம் தடைப்பட்டிருக்குமென இலங்கை மின்சார சபையின் வடமாகாணப் பிரதிப் பொதுமுகாமையாளர் தெரிவித்துள்ளார்.
இதன்படி, நாளை காலை-08 மணி முதல் மாலை-05 மணி வரை யாழ். உடுப்பிட்டி, நெல்லியடிப் பொலிஸ் நிலையம், நெல்லியடி, நெல்லியடிச் சந்தை, ரூபின்ஸ் வைத்தியசாலை, நெல்லியடி கார்கில்ஸ் பூட் சிற்றி, இலங்கை தொலைத் தொடர்பு நிலையம், நெல்லியடி இலங்கை வங்கி, கரணவாய், நாவலர்மடம், தூதாவளை, கரவெட்டி, சக்களாவத்தை, இரும்பு மதவடி, வதிரி, திக்கம், மனோகரா, சித்திவிநாயகர் கோவிலடிப் பிரதேசம், தேவரையாளி, திருநெல்வேலி, பலாலி வீதியில் திருநெல்வேலிச் சந்தியிலிருந்து வேம்படிச் சந்தி வரை,பனிக்கர் லேன், திண்ணை விடுதி, தலங்காவில் பிள்ளையார் கோவிலடி, திருநெல்வேலி கொமர்ஷல் வங்கி, தபால் பெட்டிச் சந்தி, திருநெல்வேலி புறப்பர்ட்டி டெவலப்பர்ஸ் பிறைவேற் லிமிற்ரெட், நொதேர்ண் சென்ரல் கொஸ்பிற்றல், Bright inn AVNOR லிமிற்ரெட், கந்தர்மடம் சந்தி, இலுப்பையடிச் சந்தி, சிவன்- அம்மன் வீதி, அன்னசத்திர வீதி, ஆரியகுளம் சந்தி, ஆரியகுளம் சந்தியிலிருந்து இராசாவின் தோட்டச் சந்தி வரை, நாவலர் வீதியில் புகையிரதக் கடவையிலிருந்து அம்பலவாணர் வீதி வரை, அத்தியடி, வீரமாகாளி கோவில், கம்பஸ் லேன், பலாலி வீதி டம்றோ காட்சியறை, IBC தமிழ், BCCAS ஆகிய பகுதிகளிலும் மின்சாரம் தடைப்பட்டிருக்குமெனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
“அதிரடி” இணையத்துக்காக யாழில் இருந்து “கலைநிலா”