;
Athirady Tamil News

பேராறு குடிநீர்த்திட்டம் தொடர்பில் சிவசக்தி ஆனந்தன் தெரிவித்துள்ள கருத்து தவறானது: கமக்காரர் அமைப்பு !!

0

பேராறு குடிநீர்த்திட்டம் தொடர்பில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் தெரிவித்துள்ள கருத்து தவறானது: கமக்காரர் அமைப்பு கண்டனம்

வவுனியா மாவட்டத்தில் அமைக்கப்பட்டுள்ள பேராறு குடிநீர்த்திட்டம் தொடர்பாக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் தெரிவித்துள்ள கருத்து தவறானதென பத்தினியார்குளம் கமக்காரர் அமைப்பு தெரிவித்துள்ளது.

இது தொடர்பில் பத்தினியார்குளம் கமக்காரர் அமைப்பினால் ஊடகங்களுக்கு அனுப்பிவைக்கப்பட்ட அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

கடந்த சில நாட்களாக ஊடகங்களுக்கு வழங்கி வரும் செவ்விகளில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் அவர்கள் திட்டத்தை நடைமுறைப்படுத்தும் போது ஏற்பட்ட சம்பவங்கள் தொடர்பில் உண்மைக்கு புறம்பான தகவல்களை வெளியிட்டு வருகின்றார். உண்மையில் இந்த திட்டம் வவுனியா மாவட்டத்திற்கு வருவதை தனிநபர்கள் யாரும் தடுக்கவில்லை. எனினும் இந்த திட்டத்தினை நடைமுறைப்படுத்துவதற்காக நுற்றுக்கணக்கான ஏக்கர் வளம்மிக்க வயல் நிலங்களை அரசாங்கம் சுவீகரிக்க திட்டமிட்டிருந்தது. இதனால் விவசாயிகளுக்கு ஏற்படவிருந்த பாரிய பாதிப்பகளை தடுக்கும் நோக்கில் தொடர்ச்சியாக விவசாயிகளும், கமக்காரர் அமைப்புகளும் திட்டத்துடன் சம்மந்தப்பட்ட தரப்புகளுக்கு தங்கள் பக்க நியாயமான கோரிக்கைகளை முன்வைத்துவந்தனர் அவ்வப்போது ஜனநாயக ரீதியில் தமது எதிர்ப்பினையும் வெளியிட்டு வந்துள்ளனர்.

இதனால் ஏறத்தாழ 03 வருடங்கள் திட்டத்தினை நடைமுறைப்படுத்தவதில் தாமதம் ஏற்பட்டது. விவசாயிகளின் தொடர்ச்சியான போராட்டத்தின் விளைவாக 2014ம் ஆண்டில் அரசாங்கதரப்பினர் கமக்காரர் அமைப்புடன் முத்தரப்பு ஒப்பந்தமொன்றினை செய்து கொள்ள முன்வந்தனர். இந்த ஒப்பந்தத்தில் 03 கமக்காரர் அமைப்புகளும் (சாஸ்திரிகூழாங்குளம், நொச்சிமோட்டடை, புதுக்குளம்) வவுனியா பிரதேச செயலாளரும், நீர்வழங்கல் வடிகாலமைப்புச் சபையின் தலைவரும் கையொப்பமிட்டனர். இந்த ஒப்பந்தத்தின் மூலம் விவசாயிகளுக்கு எற்படவிருந்த பாதிப்புகள் குறைக்கப்பட்டதுடன் காணி காணி சுவீகரிப்பினால் தவறவிடப்பட்ட பயிர்ச்செய்கைளுக்கான நஸ்டஈட்டு தொகைகள் வழங்கப்பட்டதுடன் மாற்றுக்காணிகளும் வேறு இடத்தில் வழங்கப்பட்டதுடன் திட்டம் ஆரம்பிக்கப்பட்டது.

பாதிக்கப்பட்ட விவசாயிகள் சார்பாக கமக்காரர் அமைப்புகள் தனித்து நின்றே போராடிய போதும் வன்னி மாவட்டத்தை பிரதிநித்துவப்படுத்திய எந்தவொரு பாராளுமன்ற உறுப்பினரும் குரல்கொடுக்கவில்லை. இதுதொடர்பில் அவர்களுக்கு கமக்காரர் அமைப்புகளால் அனுப்பிவைக்கப்பட்ட கடிதங்களுக்கு ஆகக்குறைந்தது பதில் கடிதம் கூட அவர்கள் அனுப்பவில்லை.
இந்த நிலையில் தங்களது தனிப்பட்ட அரசியல் இலாபத்திற்காக இத்திட்டம் தொடர்பில் உண்மைக்கு புறம்பான கருத்துக்களை ஊடகங்களுக்கு தெரிவித்துவருவதை பாதிக்கப்பட்ட விவசாயிகள் சார்பில் வன்மையாக கண்டிக்கின்றோம் என்று அந்த செய்திக்குறிப்பில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

“அதிரடி” இணையத்துக்காக வவுனியாவில் இருந்து “கோபி”

You might also like

Leave A Reply

Your email address will not be published.

16 + twenty =

*