;
Athirady Tamil News

பகிரங்க மன்னிப்புக் கோரினார் நியோமல் ரங்கஜீவ!!

0

பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப்பிரிவின் முன்னாள் பொலிஸ் பரிசோதகர் நியோமல் ரங்கஜீவ கொழும்பு உயர்நீதிமன்றத்திற்கு வெளியே புகைப்பட ஊடகவியலாளரிடம் நடந்துகொண்ட தனது செயல் குறித்து மன்னிப்பு கோரியுள்ளார்.

இது குறித்து ஊடகங்களுக்கு அவர் தெரிவிக்கும் போது,

அவரின் தோற்றம் எனக்கு சங்தேகத்தை ஏற்படுத்தியது, ஊடகவியலாளர்களினால் தான் நாட்டு மக்கள் பல விடயங்கள் தொடர்பிலும் அறிவுறுத்தப்படுகின்றனர்.

ஊடகங்களுடன் எந்த பிரச்சினையையும் ஏற்படுத்திக்கொள்ள நான் எண்ணவில்லை, அங்கு ஏற்பட்டது பாதுகாப்பு குறித்த ஒரு பிரச்சினையே தவிர ஊடகங்களுடன் எந்த முரண்பாடும் எனக்கு இல்லை, இந்த சம்பவம் தொடர்பில் மிகவும் வருத்தமடைகின்றேன். இதனால் ஏற்பட்ட இடையூறுக்கு நான் வருந்துவதுடன் மன்னிப்பையும் கோருகின்றேன் என்றார்.

பொலிஸ் பரிசோதகர் நியோமால் ரங்கஜீவ கொழும்பு மேல்நீதிமன்ற வளாகத்தில்வைத்து நேற்று வெள்ளிக்கிழமை தனது கடமையில் ஈடுபட்டிருந்த புகைப்பட ஊடகவியலாளர் ஒருவரை அச்சுறுத்தும் வகையில் செயற்பட்டமை குறித்து பல அமைப்புகளும், கண்டனத்தை தெரிவித்திருந்ததுடன் இதுதொடர்பில் உரிய விசாரணைகள் முன்னெடுக்கப்பட வேண்டும் என்றும் பல தரப்பிலும் வலியுறுத்திவருகின்றமை குறிப்பிடத்தக்கது.
“அதிரடி” இணையத்துக்காக தென்னிலங்கையில் இருந்து “எல்லாளன்”

You might also like

Leave A Reply

Your email address will not be published.

5 + 15 =

*