;
Athirady Tamil News

விமலேஸ்வரியிடம் 1000 கோடி கேட்டுள்ள சுமந்திரன்!!

0

கனடாவிலிருந்து தமிழரசுக் கட்சிக்கு 21 கோடி ரூபாய் நிதி வந்ததாக ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை முன்வைத்த கட்சியின் முன்னாள் மகளிர் அணி செயலாளருக்கு எதிராக ஆயிரம் கோடி ரூபாய் நஷ்ட ஈடு கோரி வக்கீல் நோட்டீஸ் அனுப்பியுள்ளதாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான எம் ஏ சுமந்திரன் தெரிவித்தார்.

வடமராட்சியில் இன்று இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்தார்.

அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்,

தமிழரசுக் கட்சியின் மகளிர் அணிச் செயலாளராக இருந்த விமலேஸ்வரி என்பவர் எமது கட்சிக்கு கனடாவிலிருந்து 21 கோடி ரூபாய் வந்ததாகவும் அந்த நிதிக்கு என்ன நடந்தது என்று வெளிப்படுத்த வேண்டும் என்றும் அந்த நிதி தவறான வழியில் கையாளப்பட்டுள்ளதாக ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை முன் வைத்திருந்தார்.

இதனை அடுத்து எமது கட்சியின் தலைவரும் செயலாளரும் அவர் மீது நடவடிக்கை எடுத்துள்ளனர்.அந்த நடவடிக்கையின் பயனாக அவர் உடனடியாக கட்சியிலிருந்து சகல பகுதிகளிலிருந்தும் இடைநிறுத்தப்பட்டுள்ளார்.
அதன் பின்னரும் அவர் பல விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர்.இந்த ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை கூறி எம்மீது சேறு பூசியுள்ளார்.இதனால் நான் ஆயிரம் கோடி ரூபாய் நஷ்ட ஈடு கோரி வக்கீல் நோட்டீஸ் அனுப்பி உள்ளேன்.

நான் அனுப்பியுள்ள வக்கீல் நோட்டீஸ் அவர் உரிய பதிலை தராத இடத்தில் நான் மேற்கொண்டு சட்ட நடவடிக்கைகளை எடுப்பதற்கு தயாராகவே இருக்கின்றேன். இந்த நடவடிக்கையை நான் ஏன் மேற்கொள்கின்றேன் என்றால் கட்சியில் இருப்பவர்கள் எம் மீது பொய்யான விசமத்தனமான பிரச்சாரங்களை மேற்கொண்டு வருகின்றனர்.
நமது கட்சியில் இருந்தே எங்களை விமர்சிப்பவர்களுக்கு இது ஒரு செய்தியாக அமையும். விமலேஸ்வரி போன்றவர்கள் மீது எடுக்கப்படும் நடவடிக்கைகள் கட்சியில் இருந்து கொண்டே எங்கள் கட்சிக்கு எதிராகச் செயற்படுவதற்கு எச்சரிக்கையாக அமையும் என நம்புகிறேன் என்றார்.
“அதிரடி” இணையத்துக்காக யாழில் இருந்து “கலைநிலா”

You might also like

Leave A Reply

Your email address will not be published.

20 + 15 =

*