;
Athirady Tamil News

708 மில்லியன் ரூபா நிதி மோசடி ; ஆறு பேருக்கு விளக்கமறியல்!!

0

கம்பஹா மாவட்டத்தில் 708 மில்லின் ரூபாவை மோசடி செய்த குற்றச்சாட்டு தொடர்பில் கைதுசெய்யப்பட்ட கம்பஹா, சனச சங்கத்தின் முன்னாள் பிரதி பொது முகாமையாளர் மற்றும் முன்னாள் பணிப்பாளர்கள் உள்ளிட்ட ஆறு பேரை செவ்வாய்க்கிழமை வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிவான் உத்தரவிட்டுள்ளார்.

குறித்த குழுவினரை சி.ஐ.டி.எனப்படும் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் கடந்த வெள்ளிக்கிழமை கைதுசெய்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட நபர்கள், 55 முதல் 81 வயதுக்குட்பட்ட, மினுவாங்கொடை, கம்பஹா, கொட்டுகொட, வத்தளை, படல்கம மற்றும் கொட்டதெனியாவ பகுதியைச் சேர்ந்தவர்கள்.

2011 தொடக்கம் 2016 க்கு இடையிலான காலப் பகுதியில் சனச சங்கத்திலருந்து 708 மில்லியன் ரூபா நிதியை மோசடி செய்ததாக இவர்கள் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
“அதிரடி” இணையத்துக்காக தென்னிலங்கையில் இருந்து “எல்லாளன்”

You might also like

Leave A Reply

Your email address will not be published.

one × five =

*