;
Athirady Tamil News

ராஜாங்கனை பகுதிக்கான தபால்மூல வாக்களிப்பு இடைநிறுத்தம்!!

0

இலங்கையில் எதிர்வரும் பொதுத் தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்புகள் நாளைமுதல் ஆரம்பமாகவுள்ள நிலையில் அநுராதபுரம் நகராட்சி, ராஜாங்களை பிரதேச சபைக்கு உட்பட்ட பகுதிக்கான வாக்களிப்பு இடைநிறுத்தப்பட்டுள்ளது.

குறித்த பகுதியின் தபால் வாக்களிப்புக்கான புதிய திகதி பின்னர் அறிவிக்கப்படும் என தேர்தல்கள் ஆணைக்குழு இன்று (ஞாயிற்றுக்கிழமை) மாலை தெரிவித்துள்ளது.

குறித்த பகுதியில் கொரோனா வைரஸ் தொற்று பரவல் நெருக்கடி காணப்படுகின்ற நிலையில் இந்த திடீர் முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, நாடாளுமன்றத் தேர்தல் 2020இற்கான தபால் மூல வாக்களிப்பு நாளை ஆரம்பிக்கப்படவுள்ள நிலையில் தபால் மூல வாக்களிப்புக்காக ஏழு நாட்கள் வழங்கப்பட்டுள்ளதாக தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

இதற்கமைய நாளை, நாளை மறுதினம் மற்றும் 15, 16, 17ஆம் திகதிகளிலும் எதிர்வரும் 20, 21 ஆம் திகதிகளிலும் வாக்களிப்புகள் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
“அதிரடி” இணையத்துக்காக தென்னிலங்கையில் இருந்து “எல்லாளன்”

You might also like

Leave A Reply

Your email address will not be published.

11 + 8 =

*