;
Athirady Tamil News

வவுனியாவில் 31வது வீரமக்கள் தினம் ஆரம்பம்.!! (படங்கள்)

0

தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் 31வது வீரமக்கள் தினம்வவுனியா கோயில்குளத்தில் அமைந்துள்ள க.உமாமகேஸ்வரன் நினைவில்லத்தில் இன்று 13/07/2020 காலை 09.30 மணியளவில் ஆரம்பித்துவைக்கப்பட்டது.

தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் அரசியல் கட்சியான ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியின் வவுனியா மாவட்ட அமைப்பாளரும் வவுனியா நகரசபை உறுப்பினருமான சந்திரகுலசிங்கம் (மோகன்) தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில்.
கழகத்தின் கொடி அரைக்கம்பத்தில் பறக்கவிடப்பட்டதுடன் தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் நாயகம் அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கத்தின் திருவுருவப்படத்திற்கு மலர் அஞ்சலி செலுத்தப்பட்டது.

இந் நிகழ்வில் கட்சியின் மத்திய குழு உறுப்பினர்கள், உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள், கழக தோழர்கள் பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டனர்.

குறித்த நிகழ்வு இன்றிலிருந்து எதிர்வரும் 16ம் திகதி வரை நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
“அதிரடி” இணையத்துக்காக வவுனியாவில் இருந்து “இதயசந்திரன்”

You might also like

Leave A Reply

Your email address will not be published.

15 − 1 =

*