;
Athirady Tamil News

தமிழ் தேசியக் கூட்டமைப்பாக இருந்தால் உள்ளே வரவேண்டாம் – பிரபா கணேசன்!!

0

வன்னியில் கிராமங்களுக்கு செல்லும் போது கூட்டமைப்பாக இருந்தால் உள்ளே வரவேண்டாம் என்று சொல்லும் அளவுக்கு நிலமை உள்ளது: பிரபா கணேசன்

வன்னியில் பல கிராமங்களுக்கு செல்லும் போது தமிழ் தேசியக் கூட்டமைப்பாக இருந்தால் உள்ளே வரவேண்டாம் என்று சொல்லும் அளவுக்கு மக்கள் தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு எதிராகவுள்ளார்கள் என முன்னாள் பிரதி அமைச்சரும், ஜனநாயக இடதுசாரி முன்னனியின் வன்னி மாவட்ட வேட்பாளருமான பிரபா கணேசன் தெரிவித்துள்ளார்.

வவுனியாவில் இன்று இடம்பெற்ற மக்கள் சந்திப்பின் பின் ஊடகவியலாளர் எழுப்பிய கேள்விக்கு கருத்து தெரிவித்த போதே இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில்,

வன்னி மாவட்டத்தைப் பொறுத்தவரை தேர்தல் சூடு பிடிக்க ஆரம்பித்துள்ளது. பல அரசியல் கட்சிகள் மற்றும் சுயேட்சைக் குழுக்கள் போட்டியிடுகின்றன. என்னைப் பொறுத்தவரை எதிர்காலத்தில் நாங்கள் வன்னி மக்களுக்கு எதை செய்யப் போகின்றோம் என்பதை முன்னிறுத்தியே போட்டியிடுகின்றோம். கடந்த காலத்தில் மக்களிடம் ஆணை பெற்ற தமிழ் தேசியக் கூட்டமைப்பு மக்களுக்கு என்ன செய்தது என்பதை மக்களுக்கு சொல்ல வேண்டியதில்லை. இன்று பல கிராமங்களுக்கு செல்லும் போது தமிழ் தேசியக் கூட்டமைப்பாக இருந்தால் உள்ளே வரவேண்டாம் என்று சொல்லும் அளவுக்கு மக்கள் தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு எதிராகவுள்ளார்கள்.

தமிழ் தேசியக் கூட்டமைப்புர்க்கு எதிரான வாக்குகள் ஊழலற்ற முறையில் செயற்படக் கூடிய எங்களுக்கு தான் கிடைக்க வேண்டுமே தவிர, சுயேட்சைக்குழுக்களுக்கும், மாற்று இனத்தவர்களுக்கும் செலலக் கூடாது. ஆகவே யாரும் பொருட்கள் கொடுத்தால் அதை வாங்கிக் கொள்ளுங்கள். அவை கொள்ளையடிக்கப்பட்டவை. ஆனால் தன்மான தமிழனாக தரமானவர்களுக்கு வாக்களியுங்கள். தமிழ் தேசியக் கூட்டமைப்பு பிரச்சாரத்திற்கு ஒருவரை அழைத்து செல்ல முடியாத நிலை உள்ளது. ஆனால் எமக்கு பின்னால் முன்னாள் போராளிகள், இளைஞர்கள் எனப் பலர் உள்ளனர். இதனால் நிச்சயமாக மாற்றம் வரும் எனத் தெரிவித்தார்.

“அதிரடி” இணையத்துக்காக வவுனியாவில் இருந்து “கோபி”

You might also like

Leave A Reply

Your email address will not be published.

5 × two =

*