;
Athirady Tamil News

உலகெங்கும் “புளொட்” அமைப்பின் “வீரமக்கள் தினம்” சுவரொட்டிகள்.. (படங்கள்)

0

உலகெங்கும் “புளொட்” அமைப்பின் “வீரமக்கள் தினம்” சுவரொட்டிகள்.. (படங்கள்)

தமிழீழ மக்கள் விடுதலைக் கழக (புளொட்) அமைப்பானது கடந்த முப்பத்தொரு (31) வருடமாக, அமரர் அமிர்தலிங்கம் அவர்களின் நினைவுநாளான ஜூலை 13 முதல் புளொட் செயலதிபர் உமாமகேஸ்வரன் அவர்களின் நினைவுநாளான ஜூலை 16 வரை “வீரமக்கள் தினமாக” வருடாவருடம் நினைவு கூரப்பட்டு வருவதும், இன்று தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தினரால் வருடந்தோறும் அனுஷ்டிக்கப்படும் வீரமக்கள் தினத்தின் ஆரம்ப நாள் என்பதும் அனைவரும் அறிந்ததே.

மேற்படி வீரமக்கள் தினத்தை முன்னிட்டு, இலங்கையின் வடகிழக்கு பகுதியெங்கும் மட்டுமல்லாது இலங்கையின் தலைநகர் கொழும்பு பகுதிகளிலும் “வீரமக்கள் தின” சுவரொட்டிகள் ஒட்டப்படும் நடவடிக்கை துரிதமாக நடைபெற்று வருகின்றன. இதில் குறிப்பாக மன்னார் மாவட்டத்தின் புளொட் அமைப்பினர் அனுப்பி வைத்துள்ள புகைப்படங்களில் சில கீழே இணைக்கப்பட்டு உள்ளது.

இதேபோல் புலம்பெயர் நாடுகளிலும் “வீரமக்கள் தின” சுவரொட்டிகள் ஒட்டப்படும் நடவடிக்கை துரிதமாக நடைபெற்று வருகின்றன. இதில் குறிப்பாக பிரான்ஸ் நாட்டில் இருந்து புளொட் கிளையினர் அனுப்பி வைத்துள்ள புகைப்படங்களையும் கீழே இணைத்து உள்ளோம்.

மேலும் எதிர்வரும் 19.07.2020 அன்று பிரான்சின் பாரிஸ் பகுதியில் முப்பத்தோராவது வீரமக்கள் தின நிகழ்வு நடைபெறவுள்ளது. மேற்படி நிகழ்வு சம்பந்தமான முழுமையான விபரத்துக்கு கீழ்காணும் இலக்கங்களுடன் தொடர்பு கொள்ளுமாறும் புளொட் பிரான்ஸ் கிளை பொறுப்பாளர் ரங்கா என்பவர் அறிய தந்துள்ளார். (சுகுமார் – (0033) 0783708163, தயா.- (0033) 0605750086, ஜெயந்தன் -.(0033) 0608018153, தயாளன் – (0033) 07 53 26 51 73)

மேலும் எதிர்வரும் 26.07.2020 அன்று சுவிஸ் சூரிச் மாநிலத்தில் முப்பத்தோராவது வீரமக்கள் தின நிகழ்வு நடைபெறவுள்ளது. மேற்படி நிகழ்வு சம்பந்தமான முழுமையான விபரத்துக்கு கீழ்காணும் இலக்கங்களுடன் தொடர்பு கொள்ளுமாறும் புளொட் சுவிஸ் கிளை அறிய தந்துள்ளனர். (தொடர்புக்கு.. 079,1096342, 079,2104566, 079,2367235, 078,9167111, 076,4454112, 077,9485214)

மன்னார் மாவட்டத்தின் புளொட் அமைப்பினர் அனுப்பி வைத்துள்ள புகைப்படங்களில் சில…

பிரான்ஸ் நாட்டில் இருந்து புளொட் கிளையினர் அனுப்பி வைத்துள்ள புகைப்படங்கள்….

சுவிஸ் சூரிச் மாநிலத்தில் முப்பத்தோராவது வீரமக்கள் தின நிகழ்வு..

மன்னாரில் “புளொட்” அமைப்பின் “வீரமக்கள் தினம்” அனுஸ்டிப்பு..! (படங்கள்)

You might also like

Leave A Reply

Your email address will not be published.

3 + 9 =

*