;
Athirady Tamil News

“புளொட்” கிளிநொச்சி தேர்தல் அலுவலக திறப்பும், சூறாவளி பிரச்சாரமும்.. (வீடியோ, படங்கள்)

0

“புளொட்” கிளிநொச்சி தேர்தல் அலுவலக திறப்பும், சூறாவளி பிரச்சாரமும்.. (வீடியோ, படங்கள்)

தமிழ் தேசிய கூட்டமைப்பின் அங்கத்துவ கட்சியான தர்மலிங்கம் சித்தார்த்தன் தலைமையிலான புளொட் அமைப்பின் அரசியல் பிரிவான “ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியின்” கிளிநொச்சி பிராந்திய தேர்தல் அலுவலக திறப்பு விழா வவுனியா நகர சபையின் கௌரவ உறுப்பினரும், ஆசிரியருமான சுந்தரலிங்கம் காண்டீபன் அவர்களின் தலைமையில் 14/07/2020 இன்றையதினம் வெகுசிறப்பாக நடைபெற்றது.

தமிழ் தேசிய கூட்டமைப்பின் யாழ்- கிளிநொச்சி தேர்தல் தொகுதிக்கான வெற்றி வேட்பாளர்களான தர்மலிங்கம் சித்தார்த்தன், பாலச்சந்திரன் கஜதீபன், ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியின் செயலாளர் ஆனந்தியண்ணர், சாவகச்சேரி பிரதேச சபை உபதலைவர் மயூரன், சாவகச்சேரி நகர சபையின் முன்னாள் உறுப்பினர் கிசோர், பச்சிலைபள்ளி பிரதேச சபையின் முன்னாள் உறுப்பினர் சிவராஜா, ஆகியோருடன் கிளிநொச்சி மாவட்ட அமைப்பாளர், செயலாளர், தோழர்கள் ஆதரவாளர்கள் என பெருந்திரளானோர் கலந்து சிறப்பித்தார்கள்.

மேலும் ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியின் தேர்தல் பிரச்சார கூட்டம் இன்று கிளிநொச்சியில் இடம்பெற்றது. குறித்த தேர்தல் பிரச்சார கூட்டம் இன்று காலை 11 மணியளவில் தனியார் விடுதி மண்டபம் ஒன்றில் இடம்பெற்றது. இதில் யாழ் தேர்தல் மாவட்ட வேட்பாளர்களான முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் தர்மலிங்கம் சித்தார்த்தன், முன்னாள் வடக்கு மாகாண சபை உறுப்பினர் கஜதீபன் ஆகியுார் கலந்து கொண்டிருந்தனர். இதன்போது இருவரும் கருத்து தெரிவித்திருந்தனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

15 − one =

*