;
Athirady Tamil News

விடுதலைப்புலிகள் மக்கள் பேரவையின் சுயேட்சைக் குழு வேட்பாளர்கள் கூட்டாக கோரிக்கை!! (படங்கள்)

0

பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்கி மக்களுக்கான அரசியல் ஈடுபட மக்கள் சந்தர்ப்பம் வழங்க வேண்டும்

விடுதலைப்புலிகள் மக்கள் பேரவையின் சுயேட்சைக் குழு வேட்பாளர்கள் கூட்டாக கோரிக்கை .

எமது முன்னாள் போராளிகள் மக்கள் என்று பலர் சிறு சிறு குற்றங்களில் கூட பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் சிறையில் தடுத்து வைக்கப்பட்ட நிலையில் உள்ளனர். அவர்கள் விடுதலை செய்யப்படல் வேண்டும். நாம் புனர்வாழ்வு பெற்ற நிலையில் முன்னாள் போராளிகளான எமக்கு மக்களுக்கான சிறந்த ஒழுக்கம்மிக்க தமிழ்தேசிய அரசியலில் பயணிக்க ஒரு சந்தர்ப்பம் தாருங்கள் என. மக்களிடமும் புலம்பெயர் சமூகத்திடமும் முன்னாள் போராளிகளிடமும் கேட்டுக் கொள்கின்றோம் என. விடுதலைப் புலிகள் மக்கள் பேரவை கோரிக்கை விடுத்துள்ளனர்.

இன்று [ 14.07.2020 ] யாழ் ஊடக மன்றத்தில் இடம் பெற்ற ஊடகச் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே குறித்த கோரிக்கையினை முன்வைத்தனர் . இச் சந்திப்பில் வேட்பாளர்களான ச.சசிகரன் செ.நாகசெல்வம்.மற்றும் செ.கண்ணன் ஆகியோர் உரையாற்றினார்கள் .

அவர்கள் மேலும் தெரிவிக்கையில் .
நாம் தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் போராளிகளான முன்னாள் போராளிகள். சுயேட்சைக் குழு 14இல் கூடாரம் சின்னத்தில் போட்டியிடுகின்றோம்.போராட்ட கால இடப்பெயர்வு அவல வாழ்வியல் மீள் குடியேற்றம் என்று எமது வாழ்க்கையில் எமது கெளரவமாக எமக்கான பாதுகாப்பாக கூடாரங்களே இருந்தன. அதன் அடையாளமாகவே நாம் கூடார சின்னத்தினை தெரிவு செய்தோம்.

நாம் அகிம்சை வழியில் போராடத் துணிந்துள்ளோம் .
இதுவரை காலம் 30 வருடங்களுக்கு மேலாக நாம் கட்டிக்க காத்த கலை கலாசாரம் பண்பாடு எல்லாவற்றையும் இழந்து கொண்டு வருகின்றோம் போருக்கு பின் .கடந்த 11 வருடம் மேலாக தமிழர் தாயகம் எல்லாம் சிதைத்து சின்னாபின்னமாக்கப் பட்டு வருகின்றது . அதனால் தான் இனியும் எம்மால் பொறுமை காக்க முடியாத நிலையில் அரசியல் பிரவேசம் வந்துள்ளோம் .எங்கள் மக்களின் கலை கலாசாரம் விழுமியம் யாவும் பாதுகாக்க வேண்டிய பொறுப்பு எம்மிடம் உள்ளது. நாங்கள் அதை விட்டு போக முடியாது. ஏனெனில் அந்தக் கனவுகளுடன் வாழ்ந்த மாவீரர்களுக்கு நிர்க்கதியான அவர்களின் பெற்றோருக்கு நாங்கள் பொறுப்பு சொல்ல வேண்டும்.

அவர்களின் பெற்றோர்கள் நிர்க்கதியாக உள்ளனர். தமிழ்ப் பிரதி நிதிகள் என நாம் தெரிவு செய்த எந்த பிரதி நிதியும் மக்களுக்காக எதுவும் செய்ய வில்லை. சிறுகச் சிறுக தெளிப்பதை வைத்து எங்கள் மக்களை கையேந்துபவர்களாக எமது தமிழ்த் தலைமைகள் மாற்றி உள்ளார்கள். நிரந்தர வருமானம் , மாதாந்த வருமானத்தை தரும் எந்த தொழில் முயற்சிகளையும் மக்களுக்காக உருவாக்கவில்லை. தமிழ்தேசியக் கூட்டமைப்பு தொடர்ந்தும் தவறு செய்து வருகின்றது. இவர்களை தொடர்ந்தும் அப்படியே பார்த்துக் கொண்டு இருக்க. எம்மால் முடியாது என்று தான் நாம் அரசியலில் பிரவேசிக்க தொடங்குகின்றோம் .

கூடார சின்னத்தில் நாம் போட்டியிடுகின்றோம் .எமது பிரவேசம் எமது தமிழ்த் தேசியத்தையும் மக்களை யும் உடைக்க கூடும் என்று தமிழ்த் தலைமைகள் குறிப்பிடக் கூடும் .
விமர்சிக்க கூடும் ஆனால் எமது நிலைப்பாடு. உடைப்பதற்கானதல்ல என்பதை அனைத்து மக்களும் புரிந்து கொள்ள வேண்டும்.. இது வரை காலமும் எமது மக்கள் அவர்களை நம்பி நம்பி திரும்பத் திரும்ப வாக்களித்தார்கள் . ஆனால் அது எதுவும் நடக்கவில்லை. தமிழ்த் தேசிய கூட்ட்டமைப்பை உருவாக்கியவர்கள் விடுதலைப்புலிகள் தான் . .இன்று பல கட்சிகள் உருவாகக் காரணமும் அவர்கள் தான் . தமிழ்த் தேசிய கூட்டமைப்பில் இருந்து பிரிந்தவர்கள் அனைவரும் இப்போ ஒவ்வொரு கட்சிகள் உருவாக்கியுள்ளனர். ஏன் பிரியவேண்டும்? ஏன் புதிய கட்சிகள்? தம்மை சர்வதேச ஆளுமை வாதிகளாக

உலகத்துக்கே கூச்சலிடுபவர்கள் ஏன் சின்னாபின்னமாக்க அனுமதிக்க முடியும்? வேண்டும் .ஏன் உடைய வேண்டும்? ஏன் இறக்குமதி அரசியல் செய்ய வேண்டும்.? . அந்த நேரத்தில் தேசியத்துக்கு பிரச்சனை இல்லை.. தேர்தல் என்று வரும் போது மட்டும் ஏன் பிரச்சனை .? அவர்கள் யாரையும் முன்னிலை படுத்தாமல் இறக்குமதி செய்வதும் குற்றச்சாட்டுக்கள் வைப்பதும். தான் அவர்களின் அரசியல்.

தமிழர்களின் வலி தெரியாமல் அல்லது போராட்டத்தின் மண் வாசனை இரத்த மும் தசைகளையும் கொடுத்தவர்களின் அர்ப்பணிப்பு தெரியாதவர்களை அரசியலுக்கு கொண்டு வந்து தேசியத்தை சிதைப்பது நல்ல தலைமைத்துவத்திற்கு அழகல்ல.

தமிழர்களின் கூட்டமைப்பு என்று தான் எமது விடுதலைப் புலிகளின் தலைவரால் கூட்டமைப்பு உருவாக்கப்பட்டது, அதில் புளட் , டக்ளஸ் தேவானந்தா , ஆனந்த சங்கரி இவர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டது.இவர்கள் எல்லாரையும் அழைத்து தான் ஒழுங்கமைக்கப் படைத்து. தமிழர்களின் கூட்டமைப்பு என்று தான் கூட்டப்பட்டது.
புளட் அமைப்பு அன்று சமூகமளிக்கவில்லை. விடுதலைப் புலிகளின் கீழ் நின்று செயற்பட நாம் தயாரில்லை என்று சித்தார்தன் கூறினார். டக்ளஸ் தேவானந்தா தொலைபேசியில் கூறினார். நான் உங்களுடன் வரவில்லை. நாங்கள் இப்படியே இருந்து செயற்படுகின்றோம் என்றார். ஆனந்த சங்கரி ஒரு சந்திப்பு மட்டும் தான் வந்தார்.பின்பு பதில் இல்லை.

தமிழ்தேசியக் கூட்டமைப்பு என்பது தமிழரசுக் கடைசிக்கோ, டெலோவுக்கோ, ஈ பி ஆர் எல் எப் க்கோ ஏனைய கட்சிகளுக்கு இக்கட்டமைப்பை தாரை வார்த்து நாம் கொடுக்கவில்லை. தமிழர்களின் கூட்டமைப்பாக தான் உருவாக்கப்பட்டது. அழைக்கப்பட்டும் வராதவர்களை விட வந்தவர்களை இணைத்து செயற்பட்டது . அவர்களால் தான் இப்போ தமிழ்த் தேசியத்திற்கு பிரச்சனையாக உள்ளது. தேசியத்தின் பிரச்சனை என்பது

எமது இனத்தை இனத்தால் மொழியால் வர்க்கத்தால் பிரிக்க வெளிக்கிட்டு அந்த பிரிவினைவாதிகள் தம்மைத் தாமே தமிழ்த் தலைமைகள் என்று குறிப்பிட்டுக் கொண்டிருக்கின்றனர்.

குறுகிய தொகை கொண்டவர்களாக தான் நாம் உள்ளோம் . வடக்கு கிழக்கில் 12 இலட்சம் மக்கள் . கொழும்பு மேல் மாகாணம் 16 இலட்சம் மக்களும் .வெளிநாட்டில் 9 இலட்சம் என்று . குறுகிய தொகையில் நாம் உள்ளோம் . வர்க்க ரீதியாக மதம், சாதி என்று பிரிவினைகள் அன்றி சமதர்மத்திற்காக செயற்பட விரும்புகின்றோம் .

50 ஆயிரத்துக்கும் மேலான எமது மாவீரர்கள் எந்த அரசியலையும் அரசியல் வாதிகளையும் நம்பி மடியவில்லை. அவர்கள் மடியும் போது போராளிகளையும் தலைவரையும் நம்பி தான் மடிந்தார்கள். தான் , தனது குடும்பம் மற்றும் நாட்டைக் காப்பார்கள். என்று.தான் அவர்கள் நம்பினார்கள். நாம் சிறையில் புனர்வாழ்வு பெற்றும் வந்தோம் இவர்களுக்காக நாம் நின்றோம் . எமக்கும் கால் இல்லை. ஊனம் என்ற நிலை உண்டு. முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் மாற்றுத்திறனாளி அவர் அவர்களுக்கு என்ன செய்தார் என்றெ தெரியவில்லை. இவர்கள் அரசியலில் தெளிவானவர்கள். என்று நம்பினோம்.

நாளாந்த அரசியலில் தொழில் முயற்றி மக்கள் வேலை எதுவும் அவர்கள் செய்யவில்லை. அதனால் தான் நாம் விடுதலைப் புலிகள்மக்கள் பேரவை என்ற பெயருடன் வந்துள்ளோம்

இனம் மொழி என்பன சிதைந்து போக விட முடியாது . என்பதால் அரசியலில் பாராளுமன்றத்தில் போட்டியிட வந்துள்ளோம் . மக்களிடம் நாம் கேட்பது போராளிகளை பாராளுமன்றம் அனுப்புங்கள் .

. நாம் மக்களுக்காக செயற்பட வேண்டும் என்றால் உரிய இடத்தில் நின்று தான் பேச வேண்டும் .இது வரை காலமும் அதாவது கிட்டததட்ட 70 ஆண்டுகளுக்கு மேலாக .அரசியல் வாதிகளுடன் அனைவரும் பயணித்து இருப்பீர்கள் …அதில் 30 ஆண்டு காலம் கட்டமைப்புடன் மக்களை நல்ல நிலையில் வைத்திருந்தது விடுதலை புலிகளின் தான் .

. விடுதலைப் புலிகள் என்று கூறப்படும் எங்களுடன் முன்னாள் போராளிகளுடன் விடுதலைப்புலிகள் மக்கள் பேரவையுடன் 5 வருடங்கள் இணைந்து செயற்படுங்கள். எங்களுக்கு ஆதரவு தாருங்கள்.பாராளுமன்றத்திற்கு அதிகாரம் தாருங்கள்.. நாங்கள் எதுவும் செயற்படாது விடின் எம்மை நிராகரியுங்கள். நாம் மக்களுக்காக சிறு வயதில் இருந்து போராட்டத்தில் இணைந்தோம். செயற்றப்படுகின்றோம் . பாராளுமன்றத்தில் விடுதலைப் புலிகள் என்று யாரும் இதுவரை தேர்தலில் நிற்கவில்லை

விடுதலைப் புலிகள் என்ற பெயரையும் நாமத்தையும் நீக்குவதே இன்று எமது தமிழ்த் தேசியம் பேசும் அரசியல் வாதிகளின் நிலமையாக உள்ளது. , நாங்கள் அந்த நாமத்துடன் வந்துள்ளோம் . எமக்கும் பிரச்னை உண்டு. எல்லாவற்றையும் கடந்து இருந்தும் எமது இனத்துக்காக எங்களை அர்ப்பணித்து நின்றமையால் உங்கள் முன் வந்துள்ளோம்

.அரசியல் பிரவேசத்தில் மக்கள் எமக்காக வாக்களிக்க வேண்டும் .. எமது கொள்கைக்காக , தமிழ்த்தேசியம் சுய நிர்ணய உரிமை வடக்கு கிழக்கு இணைந்த தமிழர் தாயகம் என்பதை அங்கீகரிக்க வேண்டும் .என்பதை நாம் ஒருமித்து வலியுறுத்துகின்றோம் .

சிறைக்கைதிகள் , அரசியல் கைதிகள் விடுதலை செய்யப்பட வேண்டும் . நிலங்கள் விடுவிக்கப்படல் வேண்டும் . . நிலங்கள் ராணுவ மயப்படுத்தப்படுள்ளது இராணுவ மயப்படுத்தல் தடுத்து நிறுத்துவோம் . நாட்டின் பாதுகாப்பு கருதி இராணுவம் இருக்கத் தான் வேண்டும் . அனால் அவர்கள் மக்கள் குடியிருப்பினுள் இருக்க முடியாது . எல்லையில் தான் இருக்க வேண்டும்

.வட கிழக்கில் குறிப்பாக வடக்கில் அதிக ராணுவ பிரசன்னத்தை இல்லாமல் செய்ய வேண்டும் . ஊனமுற்றோர் . அவயங்களை இழந்தவர்களுக்கான வேலைத் திட்டங்களை முன் வைத்துள்ளோம் . . /மாற்றுத் திறனாளிகளுக்கான அடிப்டை வசதிகள் செய்யவில்லை. அவர்களுக்கு செய்ய வேண்டும்

இலங்கையில் . தமிழ் மொழி அரச கரும மொழி என்பது சமனாக இருக்கவேண்டும் .தமிழ் மொழியை பாதுக்காக்க பேதமின்றி இணைய வேண்டும் எமக்கு அடையாளம் மொழி .இன மத பேதம் கடந்து மொழிக்காக பயணிக்க வேண்டும் . மொழி இல்லையேல் இனம் இல்லை. . எமது மக்கள் இணைய வேண்டும் .இந்த வகையில் போராளிகளாக வந்துள்ளோம் .

7 பேரை முன்னிலை படுத்தி எமக்காக வாக்களிக்க வேண்டும் . நாம் 3 போராளிகளும் 4 மக்களும் இணைந்து போட்டியிடுகின்றோம் . விடுதலைப் போராளிகள் மீதான தடையை எடுக்க வேண்டும் . அதற்காக பாராளுமன்றத்தில் கதைக்க கூடிய வல்லமையும் ஆற்றலும் உடையவர்கள் நாங்கள் தான் . அதன் வலியை சுமந்தவர்கள் நாங்கள் .

. இன்று சிறு குற்றத்துக்கு பயங்கரவாத தடை சட்டத்தில் சிறையில் அடைக்கப் படும் நிலை உள்ளது . அதுக்கு காரணம் விடுதலைப் புலிகள் மீதான தடை . உள்ளது. அதை நிறுத்த வேண்டும் என்றால் நாம் தான் போகவேண்டும் .இலங்கை அரசிடமும் ,பெரும் பான்மையான தமிழ் மக்களிடமும் . உலக நாடுகளின் அரசையும் பகிரங்கமாக கேட்கின்றோம் . . எங்கள் மீதான தடையை எடுத்து ஜனநாயக ரீதியாக நாம் மக்கள் மத்தியில் நின்று சுதந்திரமாக செயற்பட பயணிக்க விரும்புகின்றோம் எங்கள் மீதான தடைகள் எடுக்கப் படவேண்டும் . சிறு குழப்பமுமில்லாமல் விசாரணை இல்லாமல் நாம் மக்கள் மத்தியில் சுதந்திரமாக செயற்பட ஆவண செய்ய வேண்டும் .

ஏனெனில் இனப்படுகொலை செய்தவர்கள் ஆயுதக்க குழுக்கள் ….. இனப் படுகொலை செய்தவர்கள் கொலையாளிகள் மக்கள் மத்தியில் ஒரு பிரச்சனையும் இல்லாமல் இலங்கை அரசியலில் பயணிக்கின்றனர். ஆயுதக் குழுக்கள் அரசியல் நீரோட்டதில் 25 வருடம் மேலாக பயணிக்கின்றனர் ஆனால் . எங்களுக்கு தான் பிரச்சனை . எந்த நாளும் பிரச்னைக்கு மேல் பிரச்சனை நடக்குது

. ஜனநாயக நாடு என்று கூறுமிடத்து நாமும் ஜன நாயக வழியில் செயற்பட . அனுமதிக்க வேண்டும் . அரசியல் வித்துவான்கள். ஊடகங்கள். எல்லோரும் எமக்காகவும் மக்களுக்காகவும் கதையுங்கள் எமக்கான தடையை எடுத்தால் தான் நாம் இயங்கமுடியும்

எமது மாவட்டங்களையும் மாகாணங்களை அபிவிருத்தி செய்ய வேண்டும் . செய்யக் கூடிய ஆற்றல் எம்மிடம் உண்டு . விடுதலைப் புலிகள் மீதான தடை என்பது தமிழ் மக்களுக்கான பிரச்சனை அதை எடுத்தால் தான் எமது தேசத்தை அபிவிருத்தி செய்ய முடியும் . எம்மை விட கல்விமான்கள் , தொழிலதிபர்கள், என்று பலர் புலம் பெயர் தேசத்தில் உள்ளனர். அவர்கள் தமிழ் மக்களுக்கு உதவ நிதியுடன் காத்திருக்கின்றனர். அனால் பயங்கரவாத தடை என்பது பெரும் சவாலாக உள்ளது. அனைவரும் ஒன்று பட்டால் தான் சாத்தியம் . தமிழீழ விடுதலைப் புலிகளின் போராளிகள் தளபதிகள் என்று பலரும் உள்ளனர். அவர்களுக்கும் அழைப்பு விடுக்கின்றோம் . தமிழீழ விடுதலைப் புலிகள் என்பது நாம் எமது மக்களுக்கான ஒழுக்கமான மக்களின் துன்ப துயரங்களுக்கு கைகொடுப்பவர்களை , ஆலோசனை வழங்குபவர்களையும் மக்களையும் இணைந்து கொள்ளும் படி அழைப்பு விடுக்கின்றோம் .

போராளிகளை ஒன்று படுத்த முடியும் மக்களும் ஒன்றிணைய வேண்டும் . ஒன்றினையும் போது நாம் பலமாக செயற்றப்பட முடியும் . என்றனர்.

யாழ்.தர்மினி பத்மநாதன்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

4 × three =

*