;
Athirady Tamil News

கல்வி அமைச்சு விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு!!

0

இலங்கை பரீட்சைகள் திணைக்களத்தின் ஒரு நாள் மற்றும் வழமையான சேவைகள் அனைத்தும் மீள அறிவிக்கும் வரையில் இன்று முதல் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

நாட்டில் நிலவிவரும் கொரோனா அச்சம் காரணமாக பாதுகாப்பு நடவடிக்கைகளை கருத்திற் கொண்டு இத் தீர்மானம் எட்டப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுளளது.

அது குறித்து கல்வி அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில்,

சான்றிதழ்களைப் பெற விரும்பும் விண்ணப்பதாரர்கள் நிகழ்நிலை (online) ஊடாக அல்லது மின்னஞ்சலின் ஊடாக விண்ணப்பித்து 48 மணி நேரத்திற்குள் சான்றிதழ்களை அவர்களின் வீடுகளுக்கே பெற்றுக்கொள்வதற்கான வசதிகள் ஏற்படுத்தி கொடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சு தெரிவித்துள்ளது.

இது தொடர்பான மேலதிக தகவல்களுக்கு பரீட்சை திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளமான www.doenets.lk என்ற இணையத்தளத்தின் ஊடாக அல்லது 0112784323 என்ற தொலைபேசி இலக்கத்தின் ஊடாக சான்றிதல் பிரிவை தொடர்பு கொள்ள முடியும் எனவும் 1911 என்ற இலக்கத்திற்கு அழைத்து தகவல்களை பெற்று கொள்ள முடியும் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
“அதிரடி” இணையத்துக்காக தென்னிலங்கையில் இருந்து “எல்லாளன்”

You might also like

Leave A Reply

Your email address will not be published.

4 × three =

*