;
Athirady Tamil News

எமக்கு 2 மில்லியன் அமெரிக்க டொலர்கள் மாத்திரமே கிடைத்தது – பவித்ரா வன்னி ஆராச்சி!!

0

உலக சுகாதார அமைப்பு, உலக வங்கி மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் ஆகியவற்றினால் சுகாதார அமைச்சுக்கு கிடைத்திருக்கும் பணம் தொடர்பில் ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவினால் தெரிவிக்கப்படும் கருத்து தொடர்பாக சுகாதார மற்றும் சுதேசிய வைத்தியத்துறை அமைச்சர் பவித்திரா வன்னி ஆராச்சி கருத்து தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக கருத்து தெரிவித்த சுகாதார அமைச்சர், ரணில் விக்கிரமசிங்க அவர்கள் கேள்விகளைக் கேட்பதற்கு கற்றுக்கொண்டால் சிறப்பாக இருக்கும். ஒருமுறை அவர் மிகப்பெரிய உண்மைக்கு புறம்பான பாரிய விடயம் ஒன்றினை கூறினார். அதாவது உலக சுகாதார அமைப்பினால் 4200 கோடி ரூபா எமக்கு கிடைத்திருப்பதாக அவர் கூறினார். அந்த சந்தர்ப்பத்தில் அதற்கு நான் பதிலளித்தேன் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.

உலக சுகாதார அமைப்பினால் எமக்கு 2 மில்லியன் அமெரிக்க டொலர்கள் மாத்திரமே கிடைத்தது. உலக சுகாதார அமைப்பு என்பதும் உலக வங்கி என்பதும் 2 நிறுவனங்களாகும். உலக வங்கியின் மூலம் எமக்கு 128 மில்லியன் அமெரிக்க டொலர்களே கிடைத்துள்ளது. இது 3 வருட காலத்திற்கு மாத்திரமே வழங்கப்பட்டுள்ளது. இதில் இந்த வருடத்திற்காக எமக்கு கிடைத்த தொகை 22 மில்லியன் அமெரிக்க டொலர்களாகும் என்றும் அவர் கூட்டிக்காட்டினார்.

இதேபோன்று ரணில் விக்கிரமசிங்க அவர்கள் ஐரோப்பிய ஒன்றியத்திடம் இருந்து கிடைத்த தொகை குறித்தும் கருத்து தெரிவித்துள்ளார். ஐரோப்பிய ஒன்றியம் எமக்கு ஒரு சதமேனும் வழங்கவில்லை என்றும் தெரிவித்த சுகாதார அமைச்சர், அவர் இது தொடர்பாக பலமுறை என்னிடம் கேள்வி கேட்டுள்ளார்.

என்னை பதிலளிக்குமாறும் அவர் கூறுகின்றார். இதற்கு பிறகு அவருக்கு கூறவேண்டியது ஒன்றே ஒன்று தான் இந்த கேள்விக்காக எனது காலத்தை வீண்விரயம் செய்ய நினைக்கவில்லை என்று அமைச்சர் மேலும் குறிப்பிட்டார்.
“அதிரடி” இணையத்துக்காக தென்னிலங்கையில் இருந்து “எல்லாளன்”

You might also like

Leave A Reply

Your email address will not be published.

4 × 2 =

*