;
Athirady Tamil News

வவுனியாவில் “புளொட்” அமைப்பினரால் “31வது வீரமக்கள் தினம்” அனுஸ்டிப்பு!! (வீடியோ, படங்கள்)

0

வவுனியாவில் தமிழீழ மக்கள் விடுதலை கழகத்தின் வீரமக்கள் தினம் இன்று (16) தமிழீழ மக்கள் விடுதலை கழகத்தின் (PLOTE) அரசியல் பிரிவான ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியின் வவுனியா மாவட்ட அமைப்பாளரும், நகரசபை உறுப்பினருமான க.சந்திரகுலசிங்கம் (மோகன்) தலைமையில் அனுஸ்டிக்கப்பட்டது.

வவுனியா கோவில்குளத்தில் அமைந்துள்ள உமா மகேஸ்வரன் சமாதி வளாகத்தில் நடைபெற்ற வீரமக்கள் நினைவு தினம் நிகழ்வில் தமிழீழ மக்கள் விடுதலை கழகத்தின் தலைவரும், யாழ் பாராளுமன்ற உறுப்பினருமான தருமலிங்கம் சித்தாத்தன் கலந்து கொண்டிருந்தார்.

ஆரம்ப நிகழ்வாக தமிழீழ மக்கள் விடுதலை கழகத்தின் கொடி தலைவர் த.சித்தாத்தனால் ஏற்றி வைக்கப்பட்டதைத் தொடர்ந்து, நினைவுச்சுடர் ஏற்றி வைக்கப்பட்டது.

அதனைத் தொடர்ந்து புளொட் அமைப்பின் ஸ்தாபகரும், தலைவருமான அமரர் உமாமகேஸ்வரன் திரு உருவப்படத்திற்கு மலர்மாலை அணிவித்து கழகத் தோழர்களினால் மலர் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது.

கடந்த 13 ஆம் திகதியிலிருந்து 16 ஆம் திகதிவரை தொடர்ந்து மூன்று நாட்கள் நடைபெற்ற இந்நிகழ்வின் இறுதிநாளான இன்று புளொட் அமைப்பின் மத்தியகுழு உறுப்பினர்கள், உள்ளுராட்சி மன்றங்களின் உறுப்பினர்கள், பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

“அதிரடி” இணையத்துக்காக வவுனியாவில் இருந்து “இதயசந்திரன்”

You might also like

Leave A Reply

Your email address will not be published.

nine − eight =

*