புங்குடுதீவு “வீடமைப்புத் திட்ட” திறப்பு விழா..! (படங்கள்)

புங்குடுதீவு வீடமைப்புத் திட்ட திறப்பு விழா..! (படங்கள்)
புங்குடுதீவில் அமைக்கப்பட்ட இருபத்தைந்து வீடுகளைக் கொண்ட வீடமைப்புத் திட்டமானது பல இடர்கள், நெருக்கடிகளுக்கு மத்தியில், புங்குடுதீவு மண்ணின் மைந்தரும், கல்வியமைச்சின் வடமாகாண செயலாளருமான திரு.இ.இளங்கோவன் அவர்களின் விடாத முயற்சியினால் இன்றையதினம் மங்களகரமாகத் திறக்கப்பட்டது.
மேற்படி வீடமைப்புத் திட்டத்துக்கு இறுதிநேரத்தில் இலங்கை இராணுவத்தால் முழுமையான சரீர உதவிகள் வழங்கி வைக்கப்பட்டது.
புங்குடுதீவில் அமைக்கப்பட்ட வீடமைப்புத் திட்டமானது இன்றையதினம் வடக்கு மாகாண ஆளுநர், இலங்கையின் இராணுவத் தளபதி சவேந்திர டி சில்வா, வடமாகாண பிரதம செயலாளர், மாவட்ட அரசாங்க அதிபர், தேசிய வீடமைப்பு அதிகார சபைத் தலைவர், மேலதிக மாவட்ட அரசாங்க அதிபர்கள், அதிகாரிகள், மற்றும் வடமாகாண இராணுவ, கடற்படை தளபதிகள் தலைமையில் திறந்து வைக்கப்பட்டது.
மேற்படி புங்குடுதீவில் அமைக்கப்பட்ட வீடமைப்புத் திட்டத்துக்கு முதன்முதலாக “புங்குடுதீவு சுவிஸ் ஒன்றியம்” நிதியுதவி வழங்கி வைக்கப்பட்டது.
ஏனெனில் மேற்படிக் காணியானது அரச காணியாக இருந்த போதிலும், மழை பெய்தால் நிரம்பி வழியும் பள்ளக்காணியாக இருந்ததினால், அதனை மண்போட்டு நிரப்பினால் மட்டுமே காணியற்றவர்களுக்கு இதனை வழங்கி, வீடற்றவர்களுக்கு வழங்கி வைக்க முடியும் எனும் கோரிக்கை திரு.இ.இளங்கோவன் அவர்களினால் முன்வைக்கப்பட்டு “புங்குடுதீவு சுவிஸ் ஒன்றியம்” வழங்கி வைத்ததும் குறிப்பிடத்தக்கது.
தகவல் & படங்கள்.. -புங்குடுதீவில் இருந்து சிவனடியான்.