;
Athirady Tamil News

பிரான்சில் “புளொட்” அமைப்பின் “வீரமக்கள் தினம்” நிகழ்வு..! (படங்கள்)

0

பிரான்சில் “புளொட்” அமைப்பின் “வீரமக்கள் தினம்” நிகழ்வு..! (படங்கள்)

பிரான்ஸ் பாரிசில் தமிழீழ மக்கள் விடுதலை கழகத்தின் வீரமக்கள் தினம் இன்று (19) தமிழீழ மக்கள் விடுதலை கழகத்தின் (புளொட்) பிரான்ஸ் கிளை பொறுப்பாளர் தோழர் ரங்கா தலைமையில் அனுஸ்டிக்கப்பட்டது.

ஆரம்ப நிகழ்வாக நினைவுச்சுடர் ஏற்றி வைக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து புளொட் அமைப்பின் ஸ்தாபகரும், தலைவருமான அமரர் உமாமகேஸ்வரன் திரு உருவப்படத்திற்கு மலர்மாலை அணிவித்து கழகத் தோழர்களினால் மலர் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது.

கடந்த 13 ஆம் திகதியிலிருந்து 16 ஆம் திகதிவரை தொடர்ந்து மூன்று நாட்கள் நடைபெற்ற இந்நிகழ்வின் இறுதிநாளான 16 ஆம் திகதி புளொட் அமைப்பின் தலைவர், செயலாளர், மத்தியகுழு உறுப்பினர்கள், உள்ளுராட்சி மன்றங்களின் உறுப்பினர்கள், பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டிருந்த வீரமக்கள் தின நிகழ்வு வவுனியாவிலும், கடந்த 13 ஆம் திகதி மன்னார் மாவட்ட பொறுப்பாளரின் தலைமையில் மன்னாரிலும், கடந்த 15 ஆம் திகதி மடடக்களப்பு மாவட்ட பொறுப்பாளரின் தலைமையில் மட்டக்களப்பிலும் வீரமக்கள் தினம் நடைபெற்று இருந்தது.

அதேபோல் இன்றையதினம் பிரான்சிலும் வீரமக்கள் தினம் நடைபெற்று இருந்தது. அடுத்த ஞாயிற்றுக்கிழமை மதியம் 01.30 க்கு சுவிஸ் கிளை சார்பில், சுவிஸ் சூரிச் “புக்கேக் பிளாட்ஸ்” மண்டபத்தில் நடைபெற உள்ளதும் குறிப்பிடத்தக்கது.

வவுனியாவில் “புளொட்” அமைப்பினரால் “31வது வீரமக்கள் தினம்” அனுஸ்டிப்பு!! (வீடியோ, படங்கள்)

You might also like

Leave A Reply

Your email address will not be published.

3 × 2 =

*