;
Athirady Tamil News

அரேபியாவில் இருந்து வந்த ஒருவருக்கு கொரோனா!!

0

இலங்கையில் மேலும் ஒருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

சௌதி அரேபியாவில் இருந்து வந்த ஒருவரே இவ்வாறு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

அதன்படி, இலங்கையில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 2805 ஆக அதிகரித்துள்ளது.

நாட்டில் இதுவரை 2121 பேர் பூரணமாக குணமடைந்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

அதன்படி, தற்போதைய நிலையில் 673 பேர் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வரும் நிலையில் 11 பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

15 − 6 =

*